குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௧
Qur'an Surah An-Nisa Verse 31
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ تَجْتَنِبُوْا كَبَاۤىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِيْمًا (النساء : ٤)
- in tajtanibū
- إِن تَجْتَنِبُوا۟
- If you avoid
- நீங்கள் விலகிக் கொண்டால்
- kabāira
- كَبَآئِرَ
- great (sins)
- பெரும் பாவங்களை
- mā tun'hawna
- مَا تُنْهَوْنَ
- (of) what you are forbidden
- எது/ தடுக்கப்படுகிறீர்கள்
- ʿanhu
- عَنْهُ
- from [it]
- அதை விட்டு
- nukaffir
- نُكَفِّرْ
- We will remove
- அகற்றி விடுவோம்
- ʿankum
- عَنكُمْ
- from you
- உங்களை விட்டு
- sayyiātikum
- سَيِّـَٔاتِكُمْ
- your evil deeds
- சிறு பாவங்களை/உங்கள்
- wanud'khil'kum
- وَنُدْخِلْكُم
- and We will admit you
- இன்னும் நுழைப்போம்/உங்களை
- mud'khalan
- مُّدْخَلًا
- (to) an entrance
- இடத்தில்
- karīman
- كَرِيمًا
- a noble
- கண்ணியமான
Transliteration:
In tajtaniboo kabaaa'ira maa tunhawna 'anhu nukaffir 'ankum saiyiaatikum wa nudkhilkum mudkhalan kareemaa(QS. an-Nisāʾ:31)
English Sahih International:
If you avoid the major sins which you are forbidden, We will remove from you your lesser sins and admit you to a noble entrance [into Paradise]. (QS. An-Nisa, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௧)
Jan Trust Foundation
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் தடுக்கப்படுபவற்றில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை அகற்றிவிடுவோம். இன்னும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைப்போம்.