Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௫

Qur'an Surah An-Nisa Verse 25

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰتِكُمُ الْمُؤْمِنٰتِۗ وَاللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِكُمْ ۗ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَيْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ۚ فَاِذَآ اُحْصِنَّ فَاِنْ اَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِۗ ذٰلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ ۗ وَاَنْ تَصْبِرُوْا خَيْرٌ لَّكُمْ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (النساء : ٤)

waman
وَمَن
And whoever
எவர்
lam yastaṭiʿ
لَّمْ يَسْتَطِعْ
(is) not able to
சக்தி பெறவில்லை
minkum
مِنكُمْ
among you
உங்களில்
ṭawlan
طَوْلًا
afford
பொருளாதாரம்
an yankiḥa
أَن يَنكِحَ
to marry
மணம் முடிப்பதற்கு
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
the free chaste
சுதந்திர பெண்களை
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
[the] believing women
நம்பிக்கைகொண்ட பெண்களை
famin
فَمِن
then (marry) from
ஆகவே, இருந்து
mā malakat
مَّا مَلَكَتْ
what possess[ed]
எவர்கள்/ சொந்தமாக்கின
aymānukum
أَيْمَٰنُكُم
your right hands
உங்கள் வலக்கரங்கள்
min
مِّن
of
இருந்து
fatayātikumu
فَتَيَٰتِكُمُ
your girls
உங்கள் அடிமைப் பெண்கள்
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِۚ
(of) the believers
நம்பிக்கைகொண்ட பெண்கள்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
knows best
மிக அறிந்தவன்
biīmānikum
بِإِيمَٰنِكُمۚ
about your faith
உங்கள் நம்பிக்கையை
baʿḍukum
بَعْضُكُم
You
உங்களில் சிலர்
min baʿḍin
مِّنۢ بَعْضٍۚ
(are) from (one) another
சிலரைச் சேர்ந்தவரே
fa-inkiḥūhunna
فَٱنكِحُوهُنَّ
So marry them
ஆகவே மணமுடியுங்கள் அவர்களை
bi-idh'ni
بِإِذْنِ
with (the) permission
அனுமதியுடன்
ahlihinna
أَهْلِهِنَّ
(of) their family
அவர்களின் உரிமையாளரின்
waātūhunna
وَءَاتُوهُنَّ
and give them
கொடுங்கள்/ அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّ
their bridal due
அவர்களுடைய மஹர்களை
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
in a fair manner
நல்ல முறையில்
muḥ'ṣanātin
مُحْصَنَٰتٍ
(They should be) chaste
பத்தினிகளாக
ghayra musāfiḥātin
غَيْرَ مُسَٰفِحَٰتٍ
not those who commit immorality
விபச்சாரிகளாக இல்லாமல்
walā muttakhidhāti
وَلَا مُتَّخِذَٰتِ
and not those who take
ஆக்கிக் கொள்ளாதவர்களாக
akhdānin
أَخْدَانٍۚ
secret lovers
ரகசிய நண்பர்களை
fa-idhā uḥ'ṣinna
فَإِذَآ أُحْصِنَّ
Then when they are married
அல்லது மணமுடிக்கப்பட்டால்
fa-in atayna
فَإِنْ أَتَيْنَ
and if they commit
அவர்கள் செய்தால்
bifāḥishatin
بِفَٰحِشَةٍ
adultery
மானக்கேடானதை
faʿalayhinna
فَعَلَيْهِنَّ
then for them
அவர்கள் மீது
niṣ'fu
نِصْفُ
(is) half
பாதி
mā ʿalā
مَا عَلَى
(of) what (is) on
எது/மீது
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
the free chaste women
சுதந்திரமானபெண்கள்
mina
مِنَ
of
இருந்து
l-ʿadhābi
ٱلْعَذَابِۚ
the punishment
தண்டனை
dhālika
ذَٰلِكَ
That
இது
liman
لِمَنْ
(is) for whoever
எவருக்கு
khashiya
خَشِىَ
fears
பயந்தார்
l-ʿanata
ٱلْعَنَتَ
committing sin
பாவத்தை
minkum
مِنكُمْۚ
among you
உங்களில்
wa-an taṣbirū
وَأَن تَصْبِرُوا۟
and that you be patient
நீங்கள்சகித்திருப்பது
khayrun
خَيْرٌ
(is) better
நன்று
lakum
لَّكُمْۗ
for you
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Wa mal lam yastati' minkum tawlan ai yankihal muhsanaatil mu'minaati famimmaa malakat aimaanukum min fatayaatikumul mu'minaat; wallaahu a'lamu bi eemaanikum; ba'dukum mim ba'd; fankihoohunna bi izni ahlihinna wa aatoohunna ujoorahunna bilma'roofi muhsanaatin ghaira musaa fihaatinw wa laa muttakhizaati akhdaan; fa izaaa uhsinna fa in ataina bifaahi shatin fa'alaihinnna nisfu maa 'alal muhsanaati minal 'azaab; zaalika liman khashiyal 'anata minkum; wa an tasbiroo khairul lakum; wallaahu Ghafoorur Raheem (QS. an-Nisāʾ:25)

English Sahih International:

And whoever among you cannot [find] the means to marry free, believing women, then [he may marry] from those whom your right hands possess of believing slave girls. And Allah is most knowing about your faith. You [believers] are of one another. So marry them with the permission of their people and give them their due compensation [i.e., mahr] according to what is acceptable. [They should be] chaste, neither [of] those who commit unlawful intercourse randomly nor those who take [secret] lovers. But once they are sheltered in marriage, if they should commit adultery, then for them is half the punishment for free [unmarried] women. This [allowance] is for him among you who fears affliction [i.e., sin], but to be patient is better for you. And Allah is Forgiving and Merciful. (QS. An-Nisa, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கின்றான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்கவேண்டும். விபச்சாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகின்றாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨௫)

Jan Trust Foundation

உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து (அவர் மணம் புரியலாம்). அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. ஆகவே (அடிமைகளை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள், நல்ல முறையில் அவர்களுடைய மஹர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) விபசாரிகளாக இல்லாமல், பத்தினிகளாக, ரகசிய நண்பர்களை ஆக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்). (அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, அவர்கள் மானக்கேடானதை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது (விதிக்கப்பட்டு)ள்ள தண்டனையில் பாதி அவர்கள் மீது (நிறைவேற்றப்படும்). உங்களில் பாவத்தை பயந்தவருக்கு இது (சலுகையாகும்). நீங்கள் சகித்திருப்பது உங்களுக்கு நன்று. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.