Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨

Qur'an Surah An-Nisa Verse 2

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاٰتُوا الْيَتٰمٰىٓ اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيْثَ بِالطَّيِّبِ ۖ وَلَا تَأْكُلُوْٓا اَمْوَالَهُمْ اِلٰٓى اَمْوَالِكُمْ ۗ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِيْرًا (النساء : ٤)

waātū
وَءَاتُوا۟
And give
இன்னும் கொடுங்கள்
l-yatāmā
ٱلْيَتَٰمَىٰٓ
(to) the orphans
அநாதைகளுக்கு
amwālahum
أَمْوَٰلَهُمْۖ
their wealth
செல்வங்களை/அவர்களுடைய
walā tatabaddalū
وَلَا تَتَبَدَّلُوا۟
and (do) not exchange
மாற்றி விடாதீர்கள்
l-khabītha
ٱلْخَبِيثَ
the bad
கெட்டதை
bil-ṭayibi
بِٱلطَّيِّبِۖ
with the good
நல்லதிற்கு பதிலாக
walā takulū
وَلَا تَأْكُلُوٓا۟
and (do) not consume
விழுங்காதீர்கள்
amwālahum
أَمْوَٰلَهُمْ
their wealth
செல்வங்களை/அவர்களுடைய
ilā amwālikum
إِلَىٰٓ أَمْوَٰلِكُمْۚ
with your wealth
உங்கள்/செல்வங்கள்/உடன்
innahu
إِنَّهُۥ
Indeed it
நிச்சயமாக அது
kāna
كَانَ
is
இருக்கிறது
ḥūban
حُوبًا
a sin
பாவமாக
kabīran
كَبِيرًا
great
பெரும்

Transliteration:

Wa aatul yataamaaa amwaalahum wa laa tatabad dalul khabeesa bittaiyibi wa laa taakulooo amwaalahum ilaaa amwaalikum; innahoo kaana hooban kabeeraa (QS. an-Nisāʾ:2)

English Sahih International:

And give to the orphans their properties and do not substitute the defective [of your own] for the good [of theirs]. And do not consume their properties into your own. Indeed, that is ever a great sin. (QS. An-Nisa, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨)

Jan Trust Foundation

நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுங்கள். (அதிலுள்ள) நல்லதிற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.