குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௭௧
Qur'an Surah An-Nisa Verse 171
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِيْ دِيْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّۗ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰهَآ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ ۖفَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۗ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ۗاِنْتَهُوْا خَيْرًا لَّكُمْ ۗ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ۗ سُبْحٰنَهٗٓ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا ࣖ (النساء : ٤)
- yāahla l-kitābi
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- O People (of) the Book!
- வேதக்காரர்களே
- lā taghlū
- لَا تَغْلُوا۟
- (Do) not commit excess
- அளவு கடக்காதீர்
- fī dīnikum
- فِى دِينِكُمْ
- in your religion
- உங்கள் மார்க்கத்தில்
- walā taqūlū
- وَلَا تَقُولُوا۟
- and (do) not say
- இன்னும் கூறாதீர்கள்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- about Allah
- அல்லாஹ்வின் மீது
- illā l-ḥaqa
- إِلَّا ٱلْحَقَّۚ
- except the truth
- உண்மையைத் தவிர
- innamā
- إِنَّمَا
- Only
- எல்லாம்
- l-masīḥu
- ٱلْمَسِيحُ
- the Messiah
- மஸீஹ்
- ʿīsā
- عِيسَى
- Isa
- ஈஸா
- ub'nu maryama
- ٱبْنُ مَرْيَمَ
- son (of) Maryam
- மர்யமுடைய மகன்
- rasūlu
- رَسُولُ
- (was) a Messenger
- தூதர்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- wakalimatuhu
- وَكَلِمَتُهُۥٓ
- and His word
- இன்னும் அவனுடைய வார்த்தை
- alqāhā
- أَلْقَىٰهَآ
- which He conveyed
- சேர்ப்பித்தான்/அதை
- ilā maryama
- إِلَىٰ مَرْيَمَ
- to Maryam
- மர்யமின் பக்கம்
- warūḥun
- وَرُوحٌ
- and a spirit
- இன்னும் உயிர்
- min'hu
- مِّنْهُۖ
- from Him
- அவன் புறத்திலிருந்து
- faāminū
- فَـَٔامِنُوا۟
- So believe
- ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- warusulihi
- وَرُسُلِهِۦۖ
- and His Messengers
- இன்னும் அவனுடைய தூதர்களை
- walā taqūlū
- وَلَا تَقُولُوا۟
- And (do) not say
- இன்னும் கூறாதீர்கள்
- thalāthatun
- ثَلَٰثَةٌۚ
- "Three"
- மூவர்
- intahū
- ٱنتَهُوا۟
- desist
- விலகுங்கள்
- khayran
- خَيْرًا
- (it is) better
- மிக நன்று
- lakum
- لَّكُمْۚ
- for you
- உங்களுக்கு
- innamā l-lahu
- إِنَّمَا ٱللَّهُ
- Only Allah
- அல்லாஹ் எல்லாம்
- ilāhun
- إِلَٰهٌ
- (is) God
- ஒரு கடவுள்
- wāḥidun
- وَٰحِدٌۖ
- One
- ஒரே
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥٓ
- Glory be to Him!
- அவன் மிக பரிசுத்தமானவன்
- an yakūna
- أَن يَكُونَ
- That He (should) have
- இருப்பதைவிட்டு
- lahu
- لَهُۥ
- for Him
- அவனுக்கு
- waladun
- وَلَدٌۘ
- a son
- குழந்தை
- lahu
- لَّهُۥ
- To Him (belongs)
- அவனுக்கே
- mā
- مَا
- whatever
- எவை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- (is) in the heavens
- வானங்களில்
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۗ
- and whatever (is) in the earth
- இன்னும் எவை/பூமியில்
- wakafā
- وَكَفَىٰ
- And is sufficient
- போதுமானவன்
- bil-lahi
- بِٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வே
- wakīlan
- وَكِيلًا
- (as) a Disposer of affairs
- பொறுப்பாளனாக
Transliteration:
Yaaa Ahlal Kitaabi laa taghloo fee deenikum wa laa taqooloo 'alal laahi illalhaqq; innamal Maseehu 'Eesab-nu-Maryamma Rasoolul laahi wa Kalimatuhooo alqaahaaa ilaa Maryamma wa roohum minhum fa aaminoo billaahi wa Rusulihee wa laa taqooloo salaasah; intahoo khairallakum; innamal laahu Ilaahunw Waahid, Subhaanahooo ani yakoona lahoo walad; lahoo maa fissamaawaati wa maa fil ard; wa kafaa billaahi Wakeelaa(QS. an-Nisāʾ:171)
English Sahih International:
O People of the Scripture, do not commit excess in your religion or say about Allah except the truth. The Messiah, Jesus the son of Mary, was but a messenger of Allah and His word which He directed to Mary and a soul [created at a command] from Him. So believe in Allah and His messengers. And do not say, "Three"; desist – it is better for you. Indeed, Allah is but one God. Exalted is He above having a son. To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. And sufficient is Allah as Disposer of affairs. (QS. An-Nisa, Ayah ௧௭௧)
Abdul Hameed Baqavi:
வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அன்றி, அவனுடைய ("குன்" என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கின்றார். அல்லாஹ் (தன்னுடைய) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) "மூவர்" என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரித்தானவைகளே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.) (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௭௧)
Jan Trust Foundation
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் அளவு கடக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (எதையும்) கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், -அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும்தான் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நன்று. அல்லாஹ் எல்லாம் (வணக்கத்திற்குரிய) ஒரே ஒரு கடவுள்தான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனுக்கே வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.