Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௩

Qur'an Surah An-Nisa Verse 163

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِنَّآ اَوْحَيْنَآ اِلَيْكَ كَمَآ اَوْحَيْنَآ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖۚ وَاَوْحَيْنَآ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ ۚوَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًاۚ (النساء : ٤)

innā
إِنَّآ
Indeed, We
நிச்சயமாக நாம்
awḥaynā
أَوْحَيْنَآ
have revealed
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
kamā
كَمَآ
as
போன்றே
awḥaynā
أَوْحَيْنَآ
We revealed
வஹீ அறிவித்தோம்
ilā nūḥin
إِلَىٰ نُوحٍ
to Nuh
நூஹுக்கு
wal-nabiyīna
وَٱلنَّبِيِّۦنَ
and the Prophets
இன்னும் நபிமார்களுக்கு
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦۚ
from after him
அவருக்குப் பின்னர்
wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
and We revealed
இன்னும் வஹீ அறிவித்தோம்
ilā ib'rāhīma
إِلَىٰٓ إِبْرَٰهِيمَ
to Ibrahim
இப்ராஹீமுக்கு
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
and Ismail
இன்னும் இஸ்மாயீல்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
and Ishaq
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَ
and Yaqub
இன்னும் யஃகூப்
wal-asbāṭi
وَٱلْأَسْبَاطِ
and the tribes
இன்னும் சந்ததிகள்
waʿīsā
وَعِيسَىٰ
and Isa
இன்னும் ஈஸா
wa-ayyūba
وَأَيُّوبَ
and Ayub
இன்னும் அய்யூப்
wayūnusa
وَيُونُسَ
and Yunus
இன்னும் யூனுஸ்
wahārūna
وَهَٰرُونَ
and Harun
இன்னும் ஹாரூன்
wasulaymāna
وَسُلَيْمَٰنَۚ
and Sulaiman
இன்னும் ஸுலைமான்
waātaynā
وَءَاتَيْنَا
and We gave
இன்னும் கொடுத்தோம்
dāwūda
دَاوُۥدَ
Dawood
தாவூதுக்கு
zabūran
زَبُورًا
the Zaboor
ஸபூரை

Transliteration:

innaaa awhainaaa ilaika kamaaa awhainaaa ilaa Noohinw wan nabiyyeena mim ba'dih; wa awhainaaa ilaaa ibraaheema wa Ismaaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa 'Eesaa wa Ayyooba wa Yoonusa wa haaroona wa Sulaimaan; wa aatainaa Daawooda Zabooraa (QS. an-Nisāʾ:163)

English Sahih International:

Indeed, We have revealed to you, [O Muhammad], as We revealed to Noah and the prophets after him. And We revealed to Abraham, Ishmael, Isaac, Jacob, the Descendants, Jesus, Job, Jonah, Aaron, and Solomon, and to David We gave the book [of Psalms]. (QS. An-Nisa, Ayah ௧௬௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே உங்களுக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம். அன்றி இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹீ அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௩)

Jan Trust Foundation

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுடைய) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் வஹ்யி அறிவித்தோம். தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ கொடுத்தோம்.