Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௯

Qur'an Surah An-Nisa Verse 149

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ تُبْدُوْا خَيْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْۤءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِيْرًا (النساء : ٤)

in tub'dū
إِن تُبْدُوا۟
If you disclose
நீங்கள்வெளிப்படுத்தினால்
khayran
خَيْرًا
a good
நன்மையை
aw
أَوْ
or
அல்லது
tukh'fūhu
تُخْفُوهُ
you conceal it
நீங்கள் மறைத்தால்/அதை
aw
أَوْ
or
அல்லது
taʿfū
تَعْفُوا۟
pardon
நீங்கள் மன்னித்தால்
ʿan sūin
عَن سُوٓءٍ
[of] an evil
ஒரு கெடுதியை
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
ʿafuwwan
عَفُوًّا
Oft-Pardoning
பெரிதும் பிழை பொறுப்பவனாக
qadīran
قَدِيرًا
All-Powerful
பேராற்றலுடையவனாக

Transliteration:

in tubdoo khairann aw tukhfoohu aw ta'foo 'an sooo'in fa innal laaha kaana 'afuwwan Qadeeraa (QS. an-Nisāʾ:149)

English Sahih International:

If [instead] you show [some] good or conceal it or pardon an offense – indeed, Allah is ever Pardoning and Competent. (QS. An-Nisa, Ayah ௧௪௯)

Abdul Hameed Baqavi:

(ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்து விட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪௯)

Jan Trust Foundation

நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெடுதியை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.