குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௭
Qur'an Surah An-Nisa Verse 147
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْۗ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا ۔ (النساء : ٤)
- mā yafʿalu
- مَّا يَفْعَلُ
- What would do
- என்ன?/செய்வான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- biʿadhābikum
- بِعَذَابِكُمْ
- by punishing you
- உங்களை வேதனை செய்வது கொண்டு
- in shakartum
- إِن شَكَرْتُمْ
- if you are grateful
- நீங்கள் நன்றி செலுத்தினால்
- waāmantum
- وَءَامَنتُمْۚ
- and you believe?
- இன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால்
- wakāna
- وَكَانَ
- And is
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- shākiran
- شَاكِرًا
- All-Appreciative
- நன்றியாளனாக
- ʿalīman
- عَلِيمًا
- All-Knowing
- நன்கறிந்தவனாக
Transliteration:
maa yafa'lul laahu bi 'azaabikum in shakartum wa aamantum; wa kaanal laahu Shaakiran 'Aleema(QS. an-Nisāʾ:147)
English Sahih International:
What would Allah do with [i.e., gain from] your punishment if you are grateful and believe? And ever is Allah Appreciative and Knowing. (QS. An-Nisa, Ayah ௧௪௭)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப் போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலி கொடுப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪௭)
Jan Trust Foundation
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் நன்றி செலுத்தி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால், உங்களை வேதனை செய்வது கொண்டு (அவன்) என்ன செய்வான்? அல்லாஹ் நன்றியாளனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.