குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௩௨
Qur'an Surah An-Nisa Verse 132
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗوَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا (النساء : ٤)
- walillahi mā
- وَلِلَّهِ مَا
- And for Allah (is) whatever
- அல்லாஹ்விற்கே உரியன/எவை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- (is) in the heavens
- வானங்களில்
- wamā fī
- وَمَا فِى
- and whatever (is) in
- இன்னும் எவை
- l-arḍi
- ٱلْأَرْضِۚ
- the earth
- பூமியில்
- wakafā
- وَكَفَىٰ
- And is sufficient
- போதுமானவன்
- bil-lahi
- بِٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வே
- wakīlan
- وَكِيلًا
- (as) a Disposer of affairs
- பொறுப்பாளனாக
Transliteration:
Wa lillaahi maa fis samaawaati wa maa fil ard; wa kafaa billaahi Wakeelaa(QS. an-Nisāʾ:132)
English Sahih International:
And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And sufficient is Allah as Disposer of affairs. (QS. An-Nisa, Ayah ௧௩௨)
Abdul Hameed Baqavi:
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதனைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளியாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௩௨)
Jan Trust Foundation
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.