குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௦௩
Qur'an Surah An-Nisa Verse 103
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ ۚ فَاِذَا اطْمَأْنَنْتُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا (النساء : ٤)
- fa-idhā qaḍaytumu
- فَإِذَا قَضَيْتُمُ
- Then when you (have) finished
- நீங்கள் முடித்தால்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- the prayer
- தொழுகையை
- fa-udh'kurū
- فَٱذْكُرُوا۟
- then remember
- நினைவு கூருங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- qiyāman
- قِيَٰمًا
- standing
- நின்றவர்களாக
- waquʿūdan
- وَقُعُودًا
- and sitting
- இன்னும் உட்கார்ந்தவர்களாக
- waʿalā
- وَعَلَىٰ
- and (lying) on
- இன்னும் மீது
- junūbikum
- جُنُوبِكُمْۚ
- your sides
- உங்கள் விலாக்கள்
- fa-idhā iṭ'manantum
- فَإِذَا ٱطْمَأْنَنتُمْ
- But when you are secure
- நீங்கள் நிம்மதியடைந்தால்
- fa-aqīmū
- فَأَقِيمُوا۟
- then establish
- நிலை நிறுத்துங்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَۚ
- the (regular) prayer
- தொழுகையை
- inna l-ṣalata
- إِنَّ ٱلصَّلَوٰةَ
- Indeed the prayer
- நிச்சயமாக தொழுகை
- kānat ʿalā
- كَانَتْ عَلَى
- is on
- இருக்கிறது/மீது
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
- kitāban
- كِتَٰبًا
- prescribed
- கடமையாக
- mawqūtan
- مَّوْقُوتًا
- (at) fixed times
- நேரம் குறிக்கப்பட்டது
Transliteration:
Fa izaa qadaitumus Salaata fazkurul laaha qiyaamanw wa qu'oodanw wa 'alaa junoobikum; fa izat maanantum fa aqeemus Salaah; innas Salaata kaanat 'alal mu'mineena kitaabam mawqootaa(QS. an-Nisāʾ:103)
English Sahih International:
And when you have completed the prayer, remember Allah standing, sitting, or [lying] on your sides. But when you become secure, re-establish [regular] prayer. Indeed, prayer has been decreed upon the believers a decree of specified times. (QS. An-Nisa, Ayah ௧௦௩)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி "திக்ரு" செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிளிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கின்றது. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௦௩)
Jan Trust Foundation
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.