குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮௧
Qur'an Surah Ali 'Imran Verse 81
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَآ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَاۤءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ۗ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰلِكُمْ اِصْرِيْ ۗ قَالُوْٓا اَقْرَرْنَا ۗ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا۠ مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ (آل عمران : ٣)
- wa-idh akhadha
- وَإِذْ أَخَذَ
- And when took
- வாங்கிய சமயம்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- mīthāqa
- مِيثَٰقَ
- covenant
- வாக்குறுதியை
- l-nabiyīna
- ٱلنَّبِيِّۦنَ
- (of) the Prophets
- நபிமார்களின்
- lamā ātaytukum
- لَمَآ ءَاتَيْتُكُم
- "Certainly, whatever I (have) given you
- உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம்
- min kitābin
- مِّن كِتَٰبٍ
- of (the) Book
- வேதத்தை
- waḥik'matin thumma
- وَحِكْمَةٍ ثُمَّ
- and wisdom then
- இன்னும் ஞானம்/பிறகு
- jāakum
- جَآءَكُمْ
- comes to you
- உங்களிடம் வந்தார்
- rasūlun
- رَسُولٌ
- a Messenger
- ஒரு தூதர்
- muṣaddiqun
- مُّصَدِّقٌ
- confirming
- உண்மைப்படுத்துபவர்
- limā maʿakum
- لِّمَا مَعَكُمْ
- that which (is) with you
- உங்களுடனுள்ளதை
- latu'minunna bihi
- لَتُؤْمِنُنَّ بِهِۦ
- you must believe in him
- நிச்சயமாகஅவரை நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்
- walatanṣurunnahu
- وَلَتَنصُرُنَّهُۥۚ
- and you must help him"
- இன்னும் நிச்சயமாக நீங்கள் அவருக்கு உதவவேண்டும்
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- a-aqrartum
- ءَأَقْرَرْتُمْ
- "Do you affirm
- ஏற்றீர்களா?
- wa-akhadhtum
- وَأَخَذْتُمْ
- and take
- இன்னும் ஏற்றீர்களா?
- ʿalā dhālikum
- عَلَىٰ ذَٰلِكُمْ
- on that (condition)
- மீது/இது
- iṣ'rī
- إِصْرِىۖ
- My Covenant
- என்உடன்படிக்கையை
- qālū
- قَالُوٓا۟
- They said
- கூறினார்கள்
- aqrarnā
- أَقْرَرْنَاۚ
- "We affirm"
- ஒப்புக்கொண்டோம்
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- fa-ish'hadū
- فَٱشْهَدُوا۟
- "Then bear witness
- சாட்சி பகருங்கள்
- wa-anā
- وَأَنَا۠
- and I (am)
- இன்னும் நான்
- maʿakum
- مَعَكُم
- with you
- உங்களுடன்
- mina l-shāhidīna
- مِّنَ ٱلشَّٰهِدِينَ
- among the witnesses"
- சாட்சியாளர்களில்
Transliteration:
Wa iz akhazal laahu meesaaqan Nabiyyeena lamaaa aataitukum min Kitaabinw wa Hikmatin summa jaaa'akum Rasoolum musaddiqul limaa ma'akum latu'minunna bihee wa latansurunnah; qaala 'aaqrartum wa akhaztum alaa zaalikum isree qaalooo aqrarnaa; qaala fashhadoo wa ana ma'akum minash shaahideen(QS. ʾĀl ʿImrān:81)
English Sahih International:
And [recall, O People of the Scripture], when Allah took the covenant of the prophets, [saying], "Whatever I give you of the Scripture and wisdom and then there comes to you a messenger confirming what is with you, you [must] believe in him and support him." [Allah] said, "Have you acknowledged and taken upon that My commitment?" They said, "We have acknowledged it." He said, "Then bear witness, and I am with you among the witnesses." (QS. Ali 'Imran, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்" (என்று கூறி) "இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்" என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் "இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்" என்று கூறினான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௮௧)
Jan Trust Foundation
(நினைவு கூறுங்கள்|) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக! (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் (நான்) உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம் பிறகு உங்களுடனுள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை (நீங்கள்) நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; நிச்சயமாக அவருக்கு உதவவேண்டும். (இதனை) ஏற்றீர்களா? இதன் மீது என் உடன்படிக்கையை ஏற்றீர்களா?" என்று கூறினான். (அவர்கள்) "(அதை) ஏற்றோம்" எனக் கூறினார்கள். "ஆகவே, (இதற்கு நீங்களும்) சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்" என்று (அல்லாஹ்) கூறினான்.