Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮

Qur'an Surah Ali 'Imran Verse 8

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚاِنَّكَ اَنْتَ الْوَهَّابُ (آل عمران : ٣)

rabbanā
رَبَّنَا
"Our Lord!
எங்கள் இறைவா
lā tuzigh
لَا تُزِغْ
(Do) not deviate
கோணலாக்கி விடாதே
qulūbanā
قُلُوبَنَا
our hearts
எங்கள் உள்ளங்களை
baʿda
بَعْدَ
after
பின்னர்
idh hadaytanā
إِذْ هَدَيْتَنَا
[when] You (have) guided us
எங்களைநேர்வழியில்செலுத்தினாய்
wahab
وَهَبْ
and grant
இன்னும் வழங்கு
lanā
لَنَا
(for) us
எங்களுக்கு
min ladunka
مِن لَّدُنكَ
from Yourself
உன்னிடமிருந்து
raḥmatan
رَحْمَةًۚ
mercy
கருணையை
innaka anta
إِنَّكَ أَنتَ
Indeed You You
நிச்சயமாக நீதான்
l-wahābu
ٱلْوَهَّابُ
(are) the Bestower
வாரி வழங்குபவன்

Transliteration:

Rabbanaa laa tuzigh quloobanaa ba'da iz hadaitanaa wa hab lanaa mil ladunka rahmah; innaka antal Wahhaab (QS. ʾĀl ʿImrān:8)

English Sahih International:

[Who say], "Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower. (QS. Ali 'Imran, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!" (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௮)

Jan Trust Foundation

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின்னர் எங்கள் உள்ளங்களை கோணலாக்கிவிடாதே! உன்னிடமிருந்து கருணையை எங்களுக்கு வழங்கு! நிச்சயமாக நீதான் வாரி வழங்குபவன்!