குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௭
Qur'an Surah Ali 'Imran Verse 67
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَاكَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّلٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًاۗ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ (آل عمران : ٣)
- mā kāna
- مَا كَانَ
- Not was
- இருக்கவில்லை
- ib'rāhīmu
- إِبْرَٰهِيمُ
- Ibrahim
- இப்றாஹீம்
- yahūdiyyan
- يَهُودِيًّا
- a Jew
- யூதராக
- walā
- وَلَا
- and not
- இன்னும் இல்லை
- naṣrāniyyan
- نَصْرَانِيًّا
- a Christian
- கிறித்தவராக
- walākin kāna
- وَلَٰكِن كَانَ
- and but he was
- எனினும் இருந்தார்
- ḥanīfan
- حَنِيفًا
- a true
- அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக
- mus'liman
- مُّسْلِمًا
- Muslim
- முஸ்லிமாக
- wamā kāna
- وَمَا كَانَ
- and not he was
- அவர்இருக்கவில்லை
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- from the polytheists
- இணைவைப்பவர்களில்
Transliteration:
Maa kaana Ibraaheemu Yahoodiyyanw wa laa Nasraa niyyanw wa laakin kaana Haneefam Muslimanw wa maa kaana minal mushrikeen(QS. ʾĀl ʿImrān:67)
English Sahih International:
Abraham was neither a Jew nor a Christian, but he was one inclining toward truth, a Muslim [submitting to Allah]. And he was not of the polytheists. (QS. Ali 'Imran, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான முஸ்லிமாகவே இருந்தார். அன்றி அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௬௭)
Jan Trust Foundation
இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்றாஹீம் யூதராக, கிறித்தவராக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக, முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்தவராக) இருந்தார். இணைவைப்பவர்களில் அவர் இருக்கவில்லை.