Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௫

Qur'an Surah Ali 'Imran Verse 65

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَاۤجُّوْنَ فِيْٓ اِبْرٰهِيْمَ وَمَآ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖۗ اَفَلَا تَعْقِلُوْنَ (آل عمران : ٣)

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
O People (of) the Book!
வேதக்காரர்களே
lima
لِمَ
Why
ஏன்
tuḥājjūna
تُحَآجُّونَ
(do) you argue
தர்க்கம்செய்கிறீர்கள்
fī ib'rāhīma
فِىٓ إِبْرَٰهِيمَ
concerning Ibrahim
இப்றாஹீம் விஷயத்தில்
wamā unzilati
وَمَآ أُنزِلَتِ
while not was revealed
இறக்கப்படவில்லை
l-tawrātu
ٱلتَّوْرَىٰةُ
the Taurat
தவ்றாத்து
wal-injīlu
وَٱلْإِنجِيلُ
and the Injeel
இன்னும் இன்ஜீல்
illā
إِلَّا
except
தவிர
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦٓۚ
from? after him?
அவருக்கு பின்னரே
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
Then why don't you use your intellect?
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Transliteration:

Yaaa Ahlal Kitaabi limaa tuhaaajjoona feee Ibraaheema wa maaa unzilatit Tawraatu wal Injeelu illaa mim ba'dih; afala ta'qiloon (QS. ʾĀl ʿImrān:65)

English Sahih International:

O People of the Scripture, why do you argue about Abraham while the Torah and the Gospel were not revealed until after him? Then will you not reason? (QS. Ali 'Imran, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தாரென்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கின்றீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௬௫)

Jan Trust Foundation

வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதக்காரர்களே! இப்றாஹீம் விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். தவ்றாத்தும், இன்ஜீலும் அவருக்கு பின்னரே தவிர இறக்கப்படவில்லை. சிந்தித்து புரியமாட்டீர்களா?