குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௨
Qur'an Surah Ali 'Imran Verse 52
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ فَلَمَّآ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِيْٓ اِلَى اللّٰهِ ۗ قَالَ الْحَوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ (آل عمران : ٣)
- falammā
- فَلَمَّآ
- Then when
- போது
- aḥassa
- أَحَسَّ
- perceived
- உணர்ந்தார்
- ʿīsā
- عِيسَىٰ
- Isa
- ஈஸா
- min'humu
- مِنْهُمُ
- from them
- அவர்களில்
- l-kuf'ra
- ٱلْكُفْرَ
- [the] disbelief
- நிராகரிப்பை
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- man
- مَنْ
- "Who
- யார்
- anṣārī
- أَنصَارِىٓ
- (will be) my helpers
- என் உதவியாளர்கள்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِۖ
- to Allah"
- அல்லாஹ்விற்காக
- qāla
- قَالَ
- Said
- கூறினார்
- l-ḥawāriyūna
- ٱلْحَوَارِيُّونَ
- the disciples
- தோழர்கள்
- naḥnu
- نَحْنُ
- "We
- நாங்கள்
- anṣāru
- أَنصَارُ
- (will be the) helpers
- உதவியாளர்கள்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- āmannā
- ءَامَنَّا
- we believe[d]
- நம்பிக்கை கொண்டோம்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- wa-ish'had
- وَٱشْهَدْ
- and bear witness
- சாட்சி அளிப்பீராக
- bi-annā
- بِأَنَّا
- that we
- நிச்சயமாக நாங்கள்
- mus'limūna
- مُسْلِمُونَ
- (are) Muslims
- முஸ்லிம்கள்
Transliteration:
Falammaaa ahassa 'Eesaa minhumul kufra qaala man ansaaree ilal laahi qaalal Hawaariyyoona nahnu ansaarul laahi aamannaa billaahi washhad bi annaa muslimoon(QS. ʾĀl ʿImrān:52)
English Sahih International:
But when Jesus felt [persistence in] disbelief from them, he said, "Who are my supporters for [the cause of] Allah?" The disciples said, "We are supporters for Allah. We have believed in Allah and testify that we are Muslims [submitting to Him]. (QS. Ali 'Imran, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கின்றோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். (ஆதலால்) நிச்சயமாக நாங்கள் முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீங்கள் சாட்சி கூறுங்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௨)
Jan Trust Foundation
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது| “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்| “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் (பலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த போது "அல்லாஹ்விற்காக என் உதவியாளர்கள் யார்?" எனக் கூறினார். தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி அளிப்பீராக" என்று கூறினார்கள்.