Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௨

Qur'an Surah Ali 'Imran Verse 42

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَتِ الْمَلٰۤىِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰى نِسَاۤءِ الْعٰلَمِيْنَ (آل عمران : ٣)

wa-idh
وَإِذْ
And when
சமயம்
qālati
قَالَتِ
said
கூறினா(ர்க)ள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
yāmaryamu
يَٰمَرْيَمُ
"O Maryam!
மர்யமே!
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
iṣ'ṭafāki
ٱصْطَفَىٰكِ
(has) chosen you
உம்மைத் தேர்ந்தெடுத்தான்
waṭahharaki
وَطَهَّرَكِ
and purified you
இன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்
wa-iṣ'ṭafāki
وَٱصْطَفَىٰكِ
and chosen you
இன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான்
ʿalā nisāi
عَلَىٰ نِسَآءِ
over (the) women
பெண்களைவிட
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds"
அகிலத்தார்களின்

Transliteration:

Wa iz qaalatil malaaa'ikatu yaa Ya Maryamu innal laahas tafaaki wa tahharaki wastafaaki 'alaa nisaaa'il 'aalameen (QS. ʾĀl ʿImrān:42)

English Sahih International:

And [mention] when the angels said, "O Mary, indeed Allah has chosen you and purified you and chosen you above the women of the worlds. (QS. Ali 'Imran, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! மர்யமை நோக்கி) மலக்குகள் கூறிய சமயத்தில் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான். உங்களை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உங்களை மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றான், (என்றும்) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪௨)

Jan Trust Foundation

(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக, "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்தான்; உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்; அகிலத்தார்களின் பெண்களைவிட உம்மை தேர்ந்தெடுத்தான்;