Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩௯

Qur'an Surah Ali 'Imran Verse 39

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَنَادَتْهُ الْمَلٰۤىِٕكَةُ وَهُوَ قَاۤىِٕمٌ يُّصَلِّيْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًاۢ بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ (آل عمران : ٣)

fanādathu
فَنَادَتْهُ
Then called him
ஆகவேஅழைத்தா(ர்க)ள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
wahuwa qāimun
وَهُوَ قَآئِمٌ
when he (was) standing -
அவர் நின்று தொழுதுகொண்டிருக்க
yuṣallī
يُصَلِّى
praying
தொழுகிறார்
fī l-miḥ'rābi
فِى ٱلْمِحْرَابِ
in the prayer chamber
மாடத்தில்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
"Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yubashiruka
يُبَشِّرُكَ
gives you glad tidings
உமக்கு நற்செய்தி கூறுகிறான்
biyaḥyā
بِيَحْيَىٰ
of Yahya
யஹ்யாவைக் கொண்டு
muṣaddiqan
مُصَدِّقًۢا
confirming
உண்மைப்படுத்துபவராக
bikalimatin
بِكَلِمَةٍ
[of] a Word
ஒரு வாக்கியத்தை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்வின்
wasayyidan
وَسَيِّدًا
and a noble
இன்னும் தலைவராக
waḥaṣūran
وَحَصُورًا
and chaste
இன்னும் இன்பத்தைத் துறந்தவராக
wanabiyyan
وَنَبِيًّا
and a Prophet
இன்னும் நபியாக
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
among the righteous
நல்லோரைச்சேர்ந்தவர்

Transliteration:

Fanaadat hul malaaa'ikatu wa huwa qaaa'imuny yusallee fil Mihraabi annal laaha yubashshiruka bi Yahyaa musaddiqam bi Kalimatim minal laahi wa saiyidanw wa hasooranw wa Nabiyyam minas saaliheen (QS. ʾĀl ʿImrān:39)

English Sahih International:

So the angels called him while he was standing in prayer in the chamber, "Indeed, Allah gives you good tidings of John, confirming a word from Allah and [who will be] honorable, abstaining [from women], and a prophet from among the righteous." (QS. Ali 'Imran, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௩௯)

Jan Trust Foundation

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து| “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: "அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக, தலைவராக, இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரைச் சேர்ந்தவராக யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்."