குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௯
Qur'an Surah Ali 'Imran Verse 29
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنْ تُخْفُوْا مَا فِيْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ ۗوَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (آل عمران : ٣)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- in tukh'fū
- إِن تُخْفُوا۟
- "Whether you conceal
- நீங்கள் மறைத்தாலும்
- mā
- مَا
- what
- எதை
- fī ṣudūrikum
- فِى صُدُورِكُمْ
- (is) in your breasts
- உங்கள் நெஞ்சங்களில்
- aw
- أَوْ
- or
- அல்லது
- tub'dūhu
- تُبْدُوهُ
- you disclose it
- அதை வெளிப்படுத்தினாலும்
- yaʿlamhu
- يَعْلَمْهُ
- knows it
- அதைஅறிவான்
- l-lahu
- ٱللَّهُۗ
- Allah
- அல்லாஹ்
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- And He knows
- இன்னும் அறிவான்
- mā
- مَا
- what
- எதை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- (is) in the heavens
- வானங்களில்
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۗ
- and what (is) in the earth
- இன்னும் பூமியில் உள்ளது
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- (is) on
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- எல்லாப் பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful"
- பேராற்றலுடையவன்
Transliteration:
Qul in tukhfoo maa fee sudoorikum aw tubdoohu ya'lamhul laah; wa ya'lamu maa fis samaawaati wa maa fil ard; wallaahu 'alaa kulli shai'in Qadeer(QS. ʾĀl ʿImrān:29)
English Sahih International:
Say, "Whether you conceal what is in your breasts or reveal it, Allah knows it. And He knows that which is in the heavens and that which is on the earth. And Allah is over all things competent. (QS. Ali 'Imran, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௯)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களிலுள்ளதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிவான். இன்னும் வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் (அவன்) அறிவான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.