Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௪

Qur'an Surah Ali 'Imran Verse 24

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ ۖ وَّغَرَّهُمْ فِيْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ (آل عمران : ٣)

dhālika
ذَٰلِكَ
That
இது
bi-annahum
بِأَنَّهُمْ
(is) because they
காரணம்/நிச்சயமாக அவர்கள்
qālū
قَالُوا۟
say
கூறினார்கள்
lan tamassanā
لَن تَمَسَّنَا
"Never will touch us
எங்களை அறவே தீண்டாது
l-nāru
ٱلنَّارُ
the Fire
நரக நெருப்பு
illā ayyāman
إِلَّآ أَيَّامًا
except (for) days
தவிர/நாட்கள்
maʿdūdātin
مَّعْدُودَٰتٍۖ
numbered"
எண்ணப்பட்டவை
wagharrahum
وَغَرَّهُمْ
And deceived them
இன்னும் ஏமாற்றிவிட்டது அவர்களை
fī dīnihim
فِى دِينِهِم
in their religion
அவர்களுடைய மார்க்கத்தில்
mā kānū
مَّا كَانُوا۟
what they were
எது/இருந்தார்கள்
yaftarūna
يَفْتَرُونَ
inventing
பொய் கூறுவார்கள்

Transliteration:

Zaalika bi annahum qaaloo lan tamassanan naaru illaaa ayyaamam ma'doodaatinw wa gharrahum fee deenihim maa kaanoo yaftaroon (QS. ʾĀl ʿImrān:24)

English Sahih International:

That is because they say, "Never will the Fire touch us except for [a few] numbered days," and [because] they were deluded in their religion by what they were inventing. (QS. Ali 'Imran, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

இதன் காரணம்: "சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது" என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான். அன்றி, தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௪)

Jan Trust Foundation

இதற்குக் காரணம்| எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"சில நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை அறவே தீண்டாது" என்று நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தாலாகும். இது தங்கள் மார்க்கத்தில் (அவர்கள்) பொய் கூறுபவர்களாக இருந்தது, அவர்களை ஏமாற்றிவிட்டது.