குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௫
Qur'an Surah Ali 'Imran Verse 195
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّيْ لَآ اُضِيْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى ۚ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ ۚ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِيْ سَبِيْلِيْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ (آل عمران : ٣)
- fa-is'tajāba
- فَٱسْتَجَابَ
- Then responded
- பதிலளித்தான்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- rabbuhum
- رَبُّهُمْ
- their Lord
- அவர்களுடைய இறைவன்
- annī
- أَنِّى
- "Indeed I
- நிச்சயமாக நான்
- lā uḍīʿu
- لَآ أُضِيعُ
- (will) not (let go) waste
- வீணாக்கமாட்டேன்
- ʿamala
- عَمَلَ
- deeds
- (நற்)செயலை
- ʿāmilin
- عَٰمِلٍ
- (of the) doer
- (நற்)செயல்புரிபவரின்
- minkum
- مِّنكُم
- among you
- உங்களில்
- min
- مِّن
- [from]
- இருந்து
- dhakarin
- ذَكَرٍ
- (whether) male
- ஆண்
- aw
- أَوْ
- or
- அல்லது
- unthā
- أُنثَىٰۖ
- female
- பெண்கள்
- baʿḍukum
- بَعْضُكُم
- each of you
- உங்களில் சிலர்
- min
- مِّنۢ
- from
- இருந்து
- baʿḍin
- بَعْضٍۖ
- (the) other
- சிலர்
- fa-alladhīna
- فَٱلَّذِينَ
- So those who
- எவர்கள்
- hājarū
- هَاجَرُوا۟
- emigrated
- ஹிஜ்ரா சென்றார்கள்
- wa-ukh'rijū
- وَأُخْرِجُوا۟
- and were driven out
- இன்னும் வெளியேற்றப்பட்டார்கள்
- min
- مِن
- from
- இருந்து
- diyārihim
- دِيَٰرِهِمْ
- their homes
- ஊர்கள்/தங்கள்
- waūdhū
- وَأُوذُوا۟
- and were harmed
- இன்னும் துன்புறுத்தப் பட்டார்கள்
- fī sabīlī
- فِى سَبِيلِى
- in My way
- எனது பாதையில்
- waqātalū
- وَقَٰتَلُوا۟
- and fought
- இன்னும் போர்செய்தார்கள்
- waqutilū
- وَقُتِلُوا۟
- and were killed -
- இன்னும் கொல்லப்பட்டார்கள்
- la-ukaffiranna
- لَأُكَفِّرَنَّ
- surely I (will) remove
- நிச்சயமாக அகற்றிடுவேன்
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டு
- sayyiātihim
- سَيِّـَٔاتِهِمْ
- their evil deeds
- தீமைகளை/ அவர்களுடைய
- wala-ud'khilannahum
- وَلَأُدْخِلَنَّهُمْ
- and surely I will admit them
- இன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்
- jannātin tajrī
- جَنَّٰتٍ تَجْرِى
- (to) Gardens flowing
- சொர்க்கங்கள்/ஓடும்
- min
- مِن
- from
- இருந்து
- taḥtihā
- تَحْتِهَا
- underneath them
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- the rivers -
- நதிகள்
- thawāban
- ثَوَابًا
- a reward
- நன்மை
- min
- مِّنْ
- from
- இருந்து
- ʿindi l-lahi
- عِندِ ٱللَّهِۗ
- [near] Allah
- அல்லாஹ்விடம்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah -
- அல்லாஹ்
- ʿindahu
- عِندَهُۥ
- with Him
- அவனிடத்தில்தான்
- ḥus'nu l-thawābi
- حُسْنُ ٱلثَّوَابِ
- (is the) best reward"
- அழகிய/நற்கூலி
Transliteration:
Fastajaaba lahum Rabbuhum annee laaa Udee'u 'amala 'aamilim minkum min zakarin aw unsaa ba'dukum mim ba'din fal lazeena haajaroo wa ukhrijoo min diyaarihim wa oozoo fee sabeelee wa qaataloo wa qutiloo la ukaffiranna 'anhum saiyi aatihim wa la udkhilanna hum Jannnatin tajree min tahtihal anhaaru sawaabam min 'indil laah; wallaahu 'indahoo husnus sawaab(QS. ʾĀl ʿImrān:195)
English Sahih International:
And their Lord responded to them, "Never will I allow to be lost the work of [any] worker among you, whether male or female; you are of one another. So those who emigrated or were evicted from their homes or were harmed in My cause or fought or were killed – I will surely remove from them their misdeeds, and I will surely admit them to gardens beneath which rivers flow as reward from Allah, and Allah has with Him the best reward." (QS. Ali 'Imran, Ayah ௧௯௫)
Abdul Hameed Baqavi:
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் "உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழைய வைப்போம்" (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௯௫)
Jan Trust Foundation
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளித்தான், "உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரா சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயம் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்." அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை வழங்கப்படுவார்கள்). அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு.