Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௧

Qur'an Surah Ali 'Imran Verse 191

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًاۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (آل عمران : ٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
yadhkurūna
يَذْكُرُونَ
remember
நினைவுகூர்வார்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
qiyāman
قِيَٰمًا
standing
நின்றவர்களாக
waquʿūdan
وَقُعُودًا
and sitting
இன்னும் உட்கார்ந்தவர்களாக
waʿalā
وَعَلَىٰ
and on
இன்னும் மீது
junūbihim
جُنُوبِهِمْ
their sides
விலாக்கள்/ அவர்களுடைய
wayatafakkarūna
وَيَتَفَكَّرُونَ
and they reflect
இன்னும் சிந்திப்பார்கள்
fī khalqi
فِى خَلْقِ
on (the) creation
படைக்கப் பட்டிருப்பதில்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
rabbanā
رَبَّنَا
"Our Lord
எங்கள் இறைவா
mā khalaqta
مَا خَلَقْتَ
not You have created
நீ படைக்கவில்லை
hādhā bāṭilan
هَٰذَا بَٰطِلًا
this (in) vain
இதை/வீணாக
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
Glory be to You
தூய்மைப்படுத்துகிறோம்/உன்னை
faqinā
فَقِنَا
so save us
ஆகவே காப்பாற்று/எங்களை
ʿadhāba
عَذَابَ
(from the) punishment
வேதனையிலிருந்து
l-nāri
ٱلنَّارِ
(of) the Fire
(நரக) நெருப்பின்

Transliteration:

Allazeena yazkuroonal laaha qiyaamaiw-wa qu'oodanw-wa 'alaa juno obihim wa yatafakkaroona fee khalqis samaawaati wal ardi Rabbanaa maa khalaqta haaza baatilan Subhaanak faqinaa 'azaaban Naar (QS. ʾĀl ʿImrān:191)

English Sahih International:

Who remember Allah while standing or sitting or [lying] on their sides and give thought to the creation of the heavens and the earth, [saying], "Our Lord, You did not create this aimlessly; exalted are You [above such a thing]; then protect us from the punishment of the Fire. (QS. Ali 'Imran, Ayah ௧௯௧)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்கள் (தங்கள்) நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், "எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக! (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௯௧)

Jan Trust Foundation

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (எவர்கள் என்றால்) நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், தங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். வானங்கள், பூமி படைக்கப்பட்டிருப்பதில் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!