Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮௭

Qur'an Surah Ali 'Imran Verse 187

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗۖ فَنَبَذُوْهُ وَرَاۤءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۗ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ (آل عمران : ٣)

wa-idh akhadha
وَإِذْ أَخَذَ
And when took
வாங்கினான்/சமயம்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
mīthāqa
مِيثَٰقَ
a Covenant
உறுதிமொழியை
alladhīna
ٱلَّذِينَ
(from) those who
எவர்கள்
ūtū
أُوتُوا۟
were given
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதம்
latubayyinunnahu
لَتُبَيِّنُنَّهُۥ
"You certainly make it clear
நிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதை
lilnnāsi
لِلنَّاسِ
to the mankind
மக்களுக்கு
walā taktumūnahu
وَلَا تَكْتُمُونَهُۥ
and (do) not conceal it
இன்னும் நீங்கள் மறைக்கக் கூடாது/அதை
fanabadhūhu
فَنَبَذُوهُ
Then they threw it
எறிந்தனர்/அதை
warāa
وَرَآءَ
behind
பின்னால்
ẓuhūrihim
ظُهُورِهِمْ
their backs
முதுகுகள் அவர்களுடைய
wa-ish'taraw
وَٱشْتَرَوْا۟
and they exchanged
இன்னும் வாங்கினர்
bihi thamanan
بِهِۦ ثَمَنًا
[with] it (for) a price
அதற்குப் பகரமாக/கிரயத்தை
qalīlan
قَلِيلًاۖ
little
சொற்பம்
fabi'sa
فَبِئْسَ
And wretched
மிகக் கெட்டது
mā yashtarūna
مَا يَشْتَرُونَ
(is) what they purchase
எது/வாங்குகிறார்கள்

Transliteration:

Wa iz akhazal laahu meesaaqal lazeena ootul Kitaaba latubaiyinunnahoo linnaasi wa laa taktumoona hoo fanabazoohu waraaa'a zuhoorihim washtaraw bihee samanan qaleelan fabi'sa maa yashtaroon (QS. ʾĀl ʿImrān:187)

English Sahih International:

And [mention, O Muhammad], when Allah took a covenant from those who were given the Scripture, [saying], "You must make it clear [i.e., explain it] to the people and not conceal it." But they threw it away behind their backs and exchanged it for a small price. And wretched is that which they purchased. (QS. Ali 'Imran, Ayah ௧௮௭)

Abdul Hameed Baqavi:

வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் "(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது" என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதி மொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது மகா கெட்டதாகும். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௮௭)

Jan Trust Foundation

தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும், அதை மறைக்கக்கூடாது" என்று வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உறுதிமொழியை அல்லாஹ் வாங்கிய சமயத்தை நினைவு கூறுங்கள். அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். இன்னும் அதற்குப் பகரமாகச் சொற்பகிரயத்தை வாங்கினர். அவர்கள் வாங்குவது மிக கெட்டது.