Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮௬

Qur'an Surah Ali 'Imran Verse 186

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ لَتُبْلَوُنَّ فِيْٓ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْۗ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْٓا اَذًى كَثِيْرًا ۗ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ (آل عمران : ٣)

latub'lawunna
لَتُبْلَوُنَّ
You will certainly be tested
நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள்
fī amwālikum
فِىٓ أَمْوَٰلِكُمْ
in your wealth
செல்வங்களில்/உங்கள்
wa-anfusikum
وَأَنفُسِكُمْ
and yourselves
இன்னும் ஆன்மாக்கள்/ உங்கள்
walatasmaʿunna
وَلَتَسْمَعُنَّ
And you will certainly hear
இன்னும் நிச்சயமாகசெவியுறுவீர்கள்
mina
مِنَ
from
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ūtū
أُوتُوا۟
were given
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
from before you
முன்னர்/உங்களுக்கு
wamina
وَمِنَ
and from
இன்னும் இருந்து
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ashrakū
أَشْرَكُوٓا۟
associate partners with Allah
இணைவைத்தார்கள்
adhan
أَذًى
hurtful things
வசை மொழியை
kathīran
كَثِيرًاۚ
many
அதிகமானது
wa-in taṣbirū
وَإِن تَصْبِرُوا۟
and if you are patient
நீங்கள் பொறுத்தால்
watattaqū
وَتَتَّقُوا۟
and fear (Allah)
இன்னும் நீங்கள்அஞ்சினால்
fa-inna dhālika
فَإِنَّ ذَٰلِكَ
then indeed that
நிச்சயமாக அதுதான்
min
مِنْ
(is) of
இல்
ʿazmi
عَزْمِ
the matters
உறுதிமிக்க
l-umūri
ٱلْأُمُورِ
(of) determination
காரியங்கள்

Transliteration:

Latublawunna feee amwaalikum wa anfusikum wa latasma'unna minal lazeena ootul Kitaaba min qablikum wa minal lazeena ashrakooo azan kaseeraa; wa in tasbiroo wa tattaqoo fa inna zaalika min 'azmil umoor (QS. ʾĀl ʿImrān:186)

English Sahih International:

You will surely be tested in your possessions and in yourselves. And you will surely hear from those who were given the Scripture before you and from those who associate others with Allah much abuse. But if you are patient and fear Allah – indeed, that is of the matters [worthy] of resolve. (QS. Ali 'Imran, Ayah ௧௮௬)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௮௬)

Jan Trust Foundation

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை நிச்சயம் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த) காரியங்களில் உள்ளதாகும்.