Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮௪

Qur'an Surah Ali 'Imran Verse 184

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَاۤءُوْ بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِيْرِ (آل عمران : ٣)

fa-in kadhabūka
فَإِن كَذَّبُوكَ
Then if they reject you
ஆகவே அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqad kudhiba
فَقَدْ كُذِّبَ
then certainly were rejected
திட்டமாகபொய்பிக்கப் பட்டார்(கள்)
rusulun
رُسُلٌ
Messengers
தூதர்கள்
min qablika
مِّن قَبْلِكَ
from before you
உமக்கு முன்னர்
jāū
جَآءُو
(who) came
வந்தார்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with the clear Signs
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
wal-zuburi
وَٱلزُّبُرِ
and the Scriptures
இன்னும் வேத நூல்கள்
wal-kitābi
وَٱلْكِتَٰبِ
and the Book
இன்னும் வேதம்
l-munīri
ٱلْمُنِيرِ
[the] Enlightening
ஒளி வீசக்கூடியது

Transliteration:

Fa in kaz zabooka faqad kuz ziba Rusulum min qablika jaaa'oo bilbaiyinaati waz Zuburi wal Kitaabil Muneer (QS. ʾĀl ʿImrān:184)

English Sahih International:

Then if they deny you, [O Muhammad] – so were messengers denied before you, who brought clear proofs and written ordinances and the enlightening Scripture. (QS. Ali 'Imran, Ayah ௧௮௪)

Abdul Hameed Baqavi:

(இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உங்களுக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்தே இருந்தனர். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௮௪)

Jan Trust Foundation

எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும் வேத நூல்களையும் ஒளிவீசுகிற வேதத்தையும் கொண்டு வந்த தூதர்களும் திட்டமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளார்கள்.