Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௮

Qur'an Surah Ali 'Imran Verse 178

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّمَا نُمْلِيْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ ۗ اِنَّمَا نُمْلِيْ لَهُمْ لِيَزْدَادُوْٓا اِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ (آل عمران : ٣)

walā yaḥsabanna
وَلَا يَحْسَبَنَّ
And (let) not think
நிச்சயமாக எண்ணவேண்டாம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
disbelieved
நிராகரித்தார்கள்
annamā num'lī
أَنَّمَا نُمْلِى
that We give respite
நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
lahum khayrun
لَهُمْ خَيْرٌ
to them (is) good
அவர்களுக்கு/நல்லது
li-anfusihim
لِّأَنفُسِهِمْۚ
for themselves
தங்களுக்கு
innamā num'lī
إِنَّمَا نُمْلِى
Only We give respite
நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
liyazdādū
لِيَزْدَادُوٓا۟
so that they may increase
அவர்கள் அதிகரிப்பதற்காக
ith'man
إِثْمًاۚ
(in) sins
பாவத்தால்
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun muhīnun
عَذَابٌ مُّهِينٌ
(is) a punishment humiliating
வேதனை/ இழிவூட்டக்கூடியது

Transliteration:

Wa laa yahsabannal lazeena kafarooo annamaa numlee lahum khairulli anfusihim; innamaa numlee lahum liyazdaadooo ismaa wa lahum 'azaabum muheen (QS. ʾĀl ʿImrān:178)

English Sahih International:

And let not those who disbelieve ever think that [because] We extend their time [of enjoyment] it is better for them. We only extend it for them so that they may increase in sin, and for them is a humiliating punishment. (QS. Ali 'Imran, Ayah ௧௭௮)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப் படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மென்மேலும்) அதிகரிப்பதற்காகவேதான். (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௮)

Jan Trust Foundation

இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தண்டிக்காமல்) நிராகரிப்பவர்கள் நாம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் தங்களுக்கு நல்லதென்று நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இழிவூட்டக்கூடிய வேதனையும் அவர்களுக்குண்டு.