குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௬
Qur'an Surah Ali 'Imran Verse 176
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِۚ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔا ۗ يُرِيْدُ اللّٰهُ اَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى الْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۚ (آل عمران : ٣)
- walā yaḥzunka
- وَلَا يَحْزُنكَ
- And (let) not grieve you
- கவலைப்படுத்த வேண்டாம்/உம்மை
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yusāriʿūna
- يُسَٰرِعُونَ
- hasten
- விரைகிறார்கள்
- fī l-kuf'ri
- فِى ٱلْكُفْرِۚ
- in(to) [the] disbelief
- நிராகரிப்பில்
- innahum
- إِنَّهُمْ
- Indeed, they
- நிச்சயமாக அவர்கள்
- lan yaḍurrū
- لَن يَضُرُّوا۟
- never will harm
- அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விற்கு
- shayan yurīdu
- شَيْـًٔاۗ يُرِيدُ
- (in) anything intends
- எதையும்/நாடுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- allā yajʿala
- أَلَّا يَجْعَلَ
- that not He will set
- ஏற்படுத்தாமல் இருக்க
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ḥaẓẓan
- حَظًّا
- any portion
- நற்பாக்கியத்தை
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِۖ
- in the Hereafter
- மறுமையில்
- walahum
- وَلَهُمْ
- And for them
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- great
- மகத்தானது
Transliteration:
Wa laa yahzunkal lazeena yusaari'oona fil Kufr; innahum lai yadurrul laaha shai'aa; yureedul laahu allaa yaj'ala lahum hazzan fil Aakhirati wa lahum 'azaabun 'azeem(QS. ʾĀl ʿImrān:176)
English Sahih International:
And do not be grieved, [O Muhammad], by those who hasten into disbelief. Indeed, they will never harm Allah at all. Allah intends that He should give them no share in the Hereafter, and for them is a great punishment. (QS. Ali 'Imran, Ayah ௧௭௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச் செய்ய அல்லாஹ் விரும்புகின்றான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அன்றி, அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௬)
Jan Trust Foundation
“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.