Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௪

Qur'an Surah Ali 'Imran Verse 174

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْۤءٌۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ۗ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ (آل عمران : ٣)

fa-inqalabū
فَٱنقَلَبُوا۟
So they returned
திரும்பினார்கள்
biniʿ'matin
بِنِعْمَةٍ
with (the) Favor
அருட்கொடையுடன்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
of Allah
அல்லாஹ்வின்
wafaḍlin
وَفَضْلٍ
and Bounty
இன்னும் அருள்
lam yamsashum
لَّمْ يَمْسَسْهُمْ
not touched them
அணுகவில்லை/ அவர்களை
sūon
سُوٓءٌ
any harm
ஒரு தீங்கு
wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
And they followed
இன்னும் பின்பற்றினார்கள்
riḍ'wāna
رِضْوَٰنَ
(the) pleasure
விருப்பத்தை
l-lahi
ٱللَّهِۗ
(of) Allah
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
and Allah
அல்லாஹ்
dhū faḍlin
ذُو فَضْلٍ
(is) Possessor (of) Bounty
அருளுடையவன்
ʿaẓīmin
عَظِيمٍ
great
மகத்தானது

Transliteration:

Fanqalaboo bini'matim minal laahi wa fadlil lam yamsashum sooo'unw wattaba'oo ridwaanal laah; wallaahu zoo fadlin 'azeem (QS. ʾĀl ʿImrān:174)

English Sahih International:

So they returned with favor from Allah and bounty, no harm having touched them. And they pursued the pleasure of Allah, and Allah is the possessor of great bounty. (QS. Ali 'Imran, Ayah ௧௭௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவனாக இருக்கின்றான். (ஆகவே பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௪)

Jan Trust Foundation

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அல்லாஹ்வின் அருட்கொடை இன்னும் அருளுடன் திரும்பினார்கள். அவர்களை ஒரு தீங்கும் அணுகவில்லை. அல்லாஹ்வின் விருப்பத்தை பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.