Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௧

Qur'an Surah Ali 'Imran Verse 171

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ يَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍۗ وَاَنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُؤْمِنِيْنَ ࣖ (آل عمران : ٣)

yastabshirūna
يَسْتَبْشِرُونَ
They receive good tidings
மகிழ்ச்சியடைவார்கள்
biniʿ'matin
بِنِعْمَةٍ
of Favor
அருட்கொடையைக் கொண்டு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடமிருந்து
wafaḍlin
وَفَضْلٍ
and Bounty
இன்னும் அருள்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
and that Allah
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
(does) not let go waste
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
(the) reward
கூலியை
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(of) the believers
நம்பிக்கையாளர்களின்

Transliteration:

Yastabshiroona bini'matim minal laahi wa fad linw wa annal laaha laa yudee'u ajral mu'mineen (QS. ʾĀl ʿImrān:171)

English Sahih International:

They receive good tidings of favor from Allah and bounty and [of the fact] that Allah does not allow the reward of believers to be lost – (QS. Ali 'Imran, Ayah ௧௭௧)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கிவிடவில்லை" என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௧)

Jan Trust Foundation

அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் அருட்கொடையைக் கொண்டும், அருளைக் கொண்டும், "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் கூலியை வீணாக்க மாட்டான்" என்பதைக் கொண்டும்மகிழ்ச்சியடைவார்கள்.