குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௮
Qur'an Surah Ali 'Imran Verse 168
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ۗ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (آل عمران : ٣)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- qālū
- قَالُوا۟
- said
- கூறினார்கள்
- li-ikh'wānihim
- لِإِخْوَٰنِهِمْ
- about their brothers
- தங்கள் சகோதரர்களுக்கு
- waqaʿadū
- وَقَعَدُوا۟
- while they sat
- இன்னும் உட்கார்ந்தார்கள்
- law aṭāʿūnā
- لَوْ أَطَاعُونَا
- "If they (had) obeyed us
- அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால்/எங்களுக்கு
- mā qutilū
- مَا قُتِلُوا۟ۗ
- not they would have been killed"
- அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
- qul fa-id'raū
- قُلْ فَٱدْرَءُوا۟
- Say "Then avert
- கூறுவீராக/தடுங்கள்
- ʿan anfusikumu
- عَنْ أَنفُسِكُمُ
- from yourselves
- விட்டு/உங்களை
- l-mawta
- ٱلْمَوْتَ
- [the] death
- மரணத்தை
- in kuntum
- إِن كُنتُمْ
- if you are
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- truthful
- உண்மையாளர்களாக
Transliteration:
Allazeena qaaloo liikhwaanihim wa qa'adoo law ataa'oonaa maa qutiloo; qul fadra'oo'an anfusikumul mawta in kuntum saadiqeen(QS. ʾĀl ʿImrān:168)
English Sahih International:
Those who said about their brothers while sitting [at home], "If they had obeyed us, they would not have been killed." Say, "Then prevent death from yourselves, if you should be truthful." (QS. Ali 'Imran, Ayah ௧௬௮)
Abdul Hameed Baqavi:
அன்றி இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்துகொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் கூறினார்கள். (ஆகவே நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன!) நீங்கள் உங்களையே மரணத்தில் இருந்து தப்பவையுங்கள்!"" (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௮)
Jan Trust Foundation
(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி| “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நயவஞ்சகர்கள் தங்கள் வீடுகளில்) உட்கார்ந்து கொண்டு, (கொல்லப்பட்ட) அவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தால் (போரில்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்று தங்கள் சகோதரர்களுக்கு கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தை தடுங்கள்!"