குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௪
Qur'an Surah Ali 'Imran Verse 164
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (آل عمران : ٣)
- laqad manna
- لَقَدْ مَنَّ
- Certainly bestowed a Favor
- திட்டமாக அருள்புரிந்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿalā
- عَلَى
- upon
- மீது
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
- idh baʿatha
- إِذْ بَعَثَ
- as He raised
- (ஏ) அனுப்பினான்
- fīhim
- فِيهِمْ
- among them
- அவர்களுக்கு மத்தியில்
- rasūlan
- رَسُولًا
- a Messenger
- ஒரு தூதரை
- min anfusihim
- مِّنْ أَنفُسِهِمْ
- from themselves
- அவர்களில் இருந்தே
- yatlū
- يَتْلُوا۟
- reciting
- ஓதுகிறார்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்கள் மீது
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- His Verses
- வசனங்களை/ அவனுடைய
- wayuzakkīhim
- وَيُزَكِّيهِمْ
- and purifying them
- இன்னும் பரிசுத்தப்படுத்து கிறார்/அவர்களை
- wayuʿallimuhumu
- وَيُعَلِّمُهُمُ
- and teaching them
- இன்னும் கற்பிக்கிறார் / அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- வேதத்தை
- wal-ḥik'mata
- وَٱلْحِكْمَةَ
- and the wisdom
- இன்னும் ஞானம்
- wa-in
- وَإِن
- although
- நிச்சயமாக
- kānū
- كَانُوا۟
- they were
- இருந்தனர்
- min qablu
- مِن قَبْلُ
- from before (that)
- (இதற்கு) முன்னர்
- lafī ḍalālin
- لَفِى ضَلَٰلٍ
- certainly in (the) error
- வழிகேட்டில்தான்
- mubīnin
- مُّبِينٍ
- clear
- பகிரங்கமானது
Transliteration:
Laqad mannal laahu 'alal mu'mineena iz ba'asa feehim Rasoolam min anfusihim yatloo 'alaihim Aayaatihee wa yuzakkeehim wa yu'allimu humul Kitaaba wal Hikmata wa in kaanoo min qablu lafee dalaalim mubeen(QS. ʾĀl ʿImrān:164)
English Sahih International:
Certainly did Allah confer [great] favor upon the believers when He sent among them a Messenger from themselves, reciting to them His verses and purifying them and teaching them the Book [i.e., the Quran] and wisdom, although they had been before in manifest error. (QS. Ali 'Imran, Ayah ௧௬௪)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௪)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல தரங்கள் (உடையோர்) ஆவர். அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.