குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௫
Qur'an Surah Ali 'Imran Verse 155
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ ࣖ (آل عمران : ٣)
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- Indeed those who
- நிச்சயமாக எவர்கள்
- tawallaw
- تَوَلَّوْا۟
- turned back
- திரும்பினார்கள்
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களில்
- yawma
- يَوْمَ
- (on the) day
- நாள்
- l-taqā
- ٱلْتَقَى
- met
- சந்தித்தார்(கள்)
- l-jamʿāni
- ٱلْجَمْعَانِ
- the two hosts
- இரு கூட்டங்கள்
- innamā is'tazallahumu
- إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ
- only made them slip
- சறுகச் செய்ததெல்லாம்/அவர்களை
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- the Shaitaan
- ஷைத்தான்
- bibaʿḍi
- بِبَعْضِ
- for some
- சிலதின் காரணமாக
- mā
- مَا
- (of) what
- எவை
- kasabū
- كَسَبُوا۟ۖ
- they (had) earned
- செய்தார்கள்
- walaqad ʿafā
- وَلَقَدْ عَفَا
- And surely forgave
- திட்டமாக மன்னித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿanhum
- عَنْهُمْۗ
- [on] them
- அவர்களை
- inna
- إِنَّ
- indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- ḥalīmun
- حَلِيمٌ
- All-Forbearing
- மகா சகிப்பாளன்
Transliteration:
Innal lazeena tawallaw minkum yawmal taqal jam'aani innamas tazallahumush Shaitaanu biba'di maa kasaboo wa laqad 'afal laahu 'anhum; innnal laaha Ghafoorum Haleem(QS. ʾĀl ʿImrān:155)
English Sahih International:
Indeed, those of you who turned back on the day the two armies met [at Uhud] – it was Satan who caused them to slip because of some [blame] they had earned. But Allah has already forgiven them. Indeed, Allah is Forgiving and Forbearing. (QS. Ali 'Imran, Ayah ௧௫௫)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௫)
Jan Trust Foundation
இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரு கூட்டங்கள் (உஹுதில்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் திரும்பினார்களோ, (அவர்கள் நிராகரிப்பினால் திரும்பவில்லை.) ஷைத்தான்அவர்களை சறுகச் செய்ததெல்லாம் (தவறுகளில்) அவர்கள் செய்த சிலதின் காரணமாகத்தான். திட்டவட்டமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா சகிப்பாளன்.