குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௨
Qur'an Surah Ali 'Imran Verse 152
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗٓ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ حَتّٰىٓ اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْۢ بَعْدِ مَآ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ۗ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ ۗ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ (آل عمران : ٣)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- ṣadaqakumu
- صَدَقَكُمُ
- fulfilled to you
- உங்களுக்கு உண்மையாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- waʿdahu idh
- وَعْدَهُۥٓ إِذْ
- His promise when
- தன் வாக்குறுதியை/போது
- taḥussūnahum
- تَحُسُّونَهُم
- you were killing them
- அவர்களை வெட்டி வீழ்த்துகிறீர்கள்
- bi-idh'nihi ḥattā
- بِإِذْنِهِۦۖ حَتَّىٰٓ
- by His permission until
- அவனுடைய அனுமதியுடன்/வரை
- idhā fashil'tum
- إِذَا فَشِلْتُمْ
- when you lost courage
- போது/கோழையாகி விட்டீர்கள்
- watanāzaʿtum
- وَتَنَٰزَعْتُمْ
- and you fell into dispute
- இன்னும் தர்க்கித்தீர்கள்
- fī l-amri
- فِى ٱلْأَمْرِ
- concerning the order
- கட்டளையில்
- waʿaṣaytum
- وَعَصَيْتُم
- and you disobeyed
- இன்னும் மாறு செய்தீர்கள்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- mā arākum
- مَآ أَرَىٰكُم
- [what] He (had) shown you
- அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு
- mā tuḥibbūna
- مَّا تُحِبُّونَۚ
- what you love
- எதை/விரும்புகிறீர்கள்
- minkum
- مِنكُم
- Among you
- உங்களில்
- man
- مَّن
- (are some) who
- எவர்
- yurīdu
- يُرِيدُ
- desire
- நாடுகிறார்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- the world
- உலகத்தை
- waminkum
- وَمِنكُم
- and among you
- இன்னும் உங்களில்
- man yurīdu
- مَّن يُرِيدُ
- (are some) who desire
- எவர் / நாடுகிறார்
- l-ākhirata
- ٱلْءَاخِرَةَۚ
- the Hereafter
- மறுமையை
- thumma ṣarafakum
- ثُمَّ صَرَفَكُمْ
- Then He diverted you
- பிறகு/திருப்பினான்/உங்களை
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டும்
- liyabtaliyakum
- لِيَبْتَلِيَكُمْۖ
- so that He may test you
- அவன் சோதிப்பதற்காக/உங்களை
- walaqad ʿafā
- وَلَقَدْ عَفَا
- And surely He forgave
- திட்டமாக மன்னித்தான்
- ʿankum
- عَنكُمْۗ
- you
- உங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- dhū faḍlin ʿalā
- ذُو فَضْلٍ عَلَى
- (is the) Possessor (of) Bounty for
- அருளுடையவன்/மீது
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
Transliteration:
Wa laqad sadaqakumul laahu wa'dahooo iz tahussoo nahum bi iznihee hattaaa izaa fashiltim wa tanaaza'tum fil amri wa 'asaitum mim ba'di maaa araakum maa tuhibboon; minkum mai yureedud dunyaa wa minkum mai yureedul Aakhirah; summa sarafakum 'anhum sarafakum 'anhum liyabtaliyakum wa laqad 'afaa 'ankum; wallaahu zoo fadlin 'alal mu'mineen(QS. ʾĀl ʿImrān:152)
English Sahih International:
And Allah had certainly fulfilled His promise to you when you were killing them [i.e., the enemy] by His permission until [the time] when you lost courage and fell to disputing about the order [given by the Prophet (^)] and disobeyed after He had shown you that which you love. Among you are some who desire this world, and among you are some who desire the Hereafter. Then He turned you back from them [defeated] that He might test you. And He has already forgiven you, and Allah is the possessor of bounty for the believers. (QS. Ali 'Imran, Ayah ௧௫௨)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறு செய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்தி வைத்திருந்த கணவாயிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உண்டு. மறுமையை விரும்புபவர்களும் உண்டு. ஆகவே உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்(களுடைய குற்றங்)களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருள் புரிபவனாக இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௨)
Jan Trust Foundation
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) அவனுடைய அனுமதியுடன் நீங்கள் அவர்களை வெட்டி வீழ்த்தும்போது அல்லாஹ் தன் வாக்கை உங்களுக்கு திட்டவட்டமாக உண்மையாக்கினான். நீங்கள் கோழையாகி, (தூதருடைய) கட்டளையில் தர்க்கித்து, நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் (தூதருக்கு) மாறுசெய்தபோது (அல்லாஹ் தன் உதவியை நிறுத்தினான்). உங்களில் உலக (செல்வ)த்தை நாடுபவரும் உண்டு. உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடுபவரும் உண்டு. பிறகு உங்களைச் சோதிப்பதற்காக அவர்களை விட்டும் உங்களைத் திருப்பினான். திட்டவட்டமாக உங்களை மன்னித்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன் ஆவான்.