Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫

Qur'an Surah Ali 'Imran Verse 15

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰلِكُمْ ۗ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِۚ (آل عمران : ٣)

qul a-unabbi-ukum
قُلْ أَؤُنَبِّئُكُم
Say "Shall I inform you
கூறுவீராக/உங்களுக்கு நான் அறிவிக்கவா?
bikhayrin
بِخَيْرٍ
of better
சிறந்ததை
min dhālikum
مِّن ذَٰلِكُمْۚ
than that
இவற்றைவிட
lilladhīna ittaqaw
لِلَّذِينَ ٱتَّقَوْا۟
For those who fear[ed]
அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு
ʿinda
عِندَ
with
இடம்
rabbihim
رَبِّهِمْ
their Lord
தங்கள் இறைவன்
jannātun tajrī
جَنَّٰتٌ تَجْرِى
(are) Gardens flows
சொர்க்கங்கள்/ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath them
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
[the] rivers -
ஆறுகள்
khālidīna
خَٰلِدِينَ
abiding forever
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
in it
அவற்றில்
wa-azwājun
وَأَزْوَٰجٌ
and spouses
இன்னும் மனைவிகள்
muṭahharatun
مُّطَهَّرَةٌ
pure
பரிசுத்தமானவள்
wariḍ'wānun
وَرِضْوَٰنٌ
and approval
இன்னும் பொருத்தம்
mina l-lahi
مِّنَ ٱللَّهِۗ
from Allah
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
(is) All-Seer
உற்று நோக்குபவன்
bil-ʿibādi
بِٱلْعِبَادِ
of (His) slaves"
அடியார்களை

Transliteration:

Qul a'unabbi 'ukum bikhairim min zaalikum; lillazeenat taqaw 'inda Rabbihim jannaatun tajree min tahtihal anhaaru khaalideena feehaa wa azwaajum mutahharatunw wa ridwaanum minal laah; wallaahu baseerum bil'ibaad (QS. ʾĀl ʿImrān:15)

English Sahih International:

Say, "Shall I inform you of [something] better than that? For those who fear Allah will be gardens in the presence of their Lord beneath which rivers flow, wherein they abide eternally, and purified spouses and approval from Allah. And Allah is Seeing [i.e., aware] of [His] servants – (QS. Ali 'Imran, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: "இவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு தங்கள் இறைவனிடம் சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். பரிசுத்தமான மனைவிகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்."