Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௬

Qur'an Surah Ali 'Imran Verse 146

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَاَيِّنْ مِّنْ نَّبِيٍّ قَاتَلَۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌۚ فَمَا وَهَنُوْا لِمَآ اَصَابَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ۗ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ (آل عمران : ٣)

waka-ayyin
وَكَأَيِّن
And how many
எத்தனையோ
min
مِّن
from
இருந்து
nabiyyin
نَّبِىٍّ
a Prophet
நபி
qātala
قَٰتَلَ
fought
போர் புரிந்தார்
maʿahu
مَعَهُۥ
with him
அவருடன்
ribbiyyūna
رِبِّيُّونَ
(were) religious scholars
நல்லடியார்கள்
kathīrun
كَثِيرٌ
many
அதிகமான
famā wahanū
فَمَا وَهَنُوا۟
But not they lost heart
அவர்கள் துணிவிழக்கவில்லை
limā aṣābahum
لِمَآ أَصَابَهُمْ
for what befell them
அவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாக
fī sabīli l-lahi
فِى سَبِيلِ ٱللَّهِ
in (the) way (of) Allah
அல்லாஹ்வின் பாதையில்
wamā ḍaʿufū
وَمَا ضَعُفُوا۟
and not they weakened
இன்னும் அவர்கள் பலவீனமடையவில்லை
wamā is'takānū
وَمَا ٱسْتَكَانُوا۟ۗ
and not they gave in
இன்னும் அவர்கள் பணியவில்லை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கிறான்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
the patient ones
பொறுமையாளர்களை

Transliteration:

Wa ka aiyim min Nabiyyin qaatala ma'ahoo ribbiyyoona kaseerun famaa wahanoo limaaa Asaabahum fee sabeelil laahi wa maa da'ufoo wa mas takaanoo; wallaahu yuhibbus saabireen (QS. ʾĀl ʿImrān:146)

English Sahih International:

And how many a prophet [fought in battle and] with him fought many religious scholars. But they never lost assurance due to what afflicted them in the cause of Allah, nor did they weaken or submit. And Allah loves the steadfast. (QS. Ali 'Imran, Ayah ௧௪௬)

Abdul Hameed Baqavi:

எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்து விடவும் இல்லை. (இவ்வாறு கஷ்டங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪௬)

Jan Trust Foundation

மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான நல்லடியார்கள் போர் புரிந்தனர். அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (கஷ்டத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவிழக்கவில்லை, பலவீனமடையவில்லை, பணியவில்லை. பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.