குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௩
Qur'an Surah Ali 'Imran Verse 143
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُۖ فَقَدْ رَاَيْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ࣖ (آل عمران : ٣)
- walaqad kuntum
- وَلَقَدْ كُنتُمْ
- And certainly you used to
- இன்னும் திட்டமாக இருந்தீர்கள்
- tamannawna
- تَمَنَّوْنَ
- wish
- ஆசைவைக்கிறீர்கள்
- l-mawta
- ٱلْمَوْتَ
- (for) death
- மரணத்தை
- min qabli
- مِن قَبْلِ
- from before
- முன்னர்
- an talqawhu
- أَن تَلْقَوْهُ
- [that] you met it
- அதைச் சந்திப்பதற்கு
- faqad ra-aytumūhu
- فَقَدْ رَأَيْتُمُوهُ
- then indeed you have seen it
- அதைப் பார்த்தும் விட்டீர்கள்
- wa-antum
- وَأَنتُمْ
- while you (were)
- நீங்களோ
- tanẓurūna
- تَنظُرُونَ
- looking on
- காண்கிறீர்கள்
Transliteration:
Wa laqad kuntum tamannnawnal mawta min qabli an talqawhu faqad ra aitumoohu wa antum tanzuroon(QS. ʾĀl ʿImrān:143)
English Sahih International:
And you had certainly wished for death [i.e., martyrdom] before you encountered it, and you have [now] seen it [before you] while you were looking on. (QS. Ali 'Imran, Ayah ௧௪௩)
Abdul Hameed Baqavi:
நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்து விட்டீர்கள். (ஆகவே இந்த போரில் ஏன் தயங்குகின்றீர்கள்?) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪௩)
Jan Trust Foundation
நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்களே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டமாக, (ஜிஹாதில்) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னர் அதை ஆசை வைத்துக் கொண்டிருந்தீர்கள். (இப்போது) அதைப் பார்த்தும் விட்டீர்கள். நீங்களோ (அதை கண்களாலும்) காண்கிறீர்கள்.