Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪

Qur'an Surah Ali 'Imran Verse 14

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَاۤءِ وَالْبَنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذٰلِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ (آل عمران : ٣)

zuyyina
زُيِّنَ
[It is] beautified
அலங்கரிக்கப்பட்டுள்ளது
lilnnāsi
لِلنَّاسِ
for mankind
மக்களுக்கு
ḥubbu
حُبُّ
(is) love
நேசிப்பது
l-shahawāti
ٱلشَّهَوَٰتِ
(of) the (things they) desire -
விருப்பங்கள்
mina
مِنَ
of
இருந்து
l-nisāi
ٱلنِّسَآءِ
[the] women
பெண்கள்
wal-banīna
وَٱلْبَنِينَ
and [the] sons
இன்னும் ஆண் பிள்ளைகள்
wal-qanāṭīri
وَٱلْقَنَٰطِيرِ
and [the] heaps
இன்னும் குவியல்கள்
l-muqanṭarati
ٱلْمُقَنطَرَةِ
[the] stored up
குவிக்கப்பட்டவை
mina
مِنَ
of
இருந்து
l-dhahabi
ٱلذَّهَبِ
[the] gold
தங்கம்
wal-fiḍati
وَٱلْفِضَّةِ
and [the] silver
இன்னும் வெள்ளி
wal-khayli
وَٱلْخَيْلِ
and [the] horses
இன்னும் குதிரைகள்
l-musawamati
ٱلْمُسَوَّمَةِ
[the] branded
அடையாளமிடப் பட்டவை
wal-anʿāmi
وَٱلْأَنْعَٰمِ
and [the] cattle
இன்னும் கால்நடைகள்
wal-ḥarthi
وَٱلْحَرْثِۗ
and [the] tilled land
இன்னும் விளை நிலம்
dhālika
ذَٰلِكَ
That
இவை
matāʿu
مَتَٰعُ
(is) provision
இன்பம்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
(of) life
வாழ்வின்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
(of) the world
உலகம்
wal-lahu
وَٱللَّهُ
but Allah -
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥ
with Him
அவனிடம்தான்
ḥus'nu
حُسْنُ
(is an) excellent
அழகிய
l-maābi
ٱلْمَـَٔابِ
[the] abode to return
தங்குமிடம்

Transliteration:

Zuyyina linnaasi hubbush shahawaati minannisaaa'i wal baneena walqanaateeril muqantarati minaz zahabi walfiddati walkhailil musawwamati wal an'aami walhars; zaalika mataa'ul hayaatid dunyaa wallaahu 'indahoo husnul ma-aab (QS. ʾĀl ʿImrān:14)

English Sahih International:

Beautified for people is the love of that which they desire – of women and sons, heaped-up sums of gold and silver, fine branded horses, and cattle and tilled land. That is the enjoyment of worldly life, but Allah has with Him the best return [i.e., Paradise]. (QS. Ali 'Imran, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௪)

Jan Trust Foundation

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய விருப்பங்களை நேசிப்பது மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்வின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ், அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.