Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩

Qur'an Surah Ali 'Imran Verse 13

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ كَانَ لَكُمْ اٰيَةٌ فِيْ فِئَتَيْنِ الْتَقَتَا ۗفِئَةٌ تُقَاتِلُ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ ۗوَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَاۤءُ ۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ (آل عمران : ٣)

qad kāna
قَدْ كَانَ
Surely it was
திட்டமாக இருந்தது
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
āyatun
ءَايَةٌ
a sign
ஓர் அத்தாட்சி
fī fi-atayni
فِى فِئَتَيْنِ
in (the) two hosts
இரு கூட்டங்களில்
l-taqatā
ٱلْتَقَتَاۖ
which met
சந்தித்தன
fi-atun
فِئَةٌ
one group
ஒரு கூட்டம்
tuqātilu
تُقَٰتِلُ
fighting
போர் புரிகிறது
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
wa-ukh'rā
وَأُخْرَىٰ
and another
இன்னும் மற்றொன்று
kāfiratun
كَافِرَةٌ
disbelievers
நிராகரிக்கக் கூடியது
yarawnahum
يَرَوْنَهُم
They were seeing them
இவர்களை காண்கின்றனர்
mith'layhim
مِّثْلَيْهِمْ
twice of them
தங்களைப் போன்று இரு மடங்குகளாக
raya
رَأْىَ
with the sight
பார்ப்பது
l-ʿayni
ٱلْعَيْنِۚ
(of) their eyes
கண்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yu-ayyidu
يُؤَيِّدُ
supports
பலப்படுத்துகிறான்
binaṣrihi
بِنَصْرِهِۦ
with His help
தன் உதவியால்
man
مَن
whom
எவர்களை
yashāu
يَشَآءُۗ
He wills
நாடுகிறான்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laʿib'ratan
لَعِبْرَةً
surely (is) a lesson
திட்டமாக ஒரு படிப்பினை
li-ulī l-abṣāri
لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
for the owners (of) vision
பார்வை உடையோருக்கு

Transliteration:

Qad kaana lakum Aayatun fee fi'atainil taqataa fi'atun tuqaatilu fee sabeelil laahi wa ukhraa kaafiratuny yarawnahum mislaihim raayal 'ayn; wallaahu yu'ayyidu bi nasrihee mai yashaaa'; innaa fee zaalika la 'ibratal li ulil absaar (QS. ʾĀl ʿImrān:13)

English Sahih International:

Already there has been for you a sign in the two armies which met [in combat at Badr] – one fighting in the cause of Allah and another of disbelievers. They saw them [to be] twice their [own] number by [their] eyesight. But Allah supports with His victory whom He wills. Indeed in that is a lesson for those of vision. (QS. Ali 'Imran, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர் களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩)

Jan Trust Foundation

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பத்ரு போரில்) சந்தித்த இரு கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கோர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறது, மற்றொன்று நிராகரிக்கக்கூடியது. இவர்களை அ(ல்லாஹ்வின் பாதையில் போர் புரிப)வர்கள் தங்களைப் போன்று இரு மடங்குகளாக கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தன் உதவியால் பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை திட்டமாக இருக்கிறது.