குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௯
Qur'an Surah Ali 'Imran Verse 119
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هٰٓاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْٓا اٰمَنَّاۖ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ ۗ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ (آل عمران : ٣)
- hāantum
- هَٰٓأَنتُمْ
- Lo! You are
- நீங்கள்
- ulāi
- أُو۟لَآءِ
- those
- எப்படிப்பட்டவர்கள்
- tuḥibbūnahum
- تُحِبُّونَهُمْ
- you love them
- நேசிக்கிறீர்கள்/ இவர்களை
- walā yuḥibbūnakum
- وَلَا يُحِبُّونَكُمْ
- but not they love you
- அவர்கள் நேசிப்பதில்லை/ உங்களை
- watu'minūna
- وَتُؤْمِنُونَ
- and you believe
- இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
- bil-kitābi
- بِٱلْكِتَٰبِ
- in the Book -
- வேதத்தை
- kullihi
- كُلِّهِۦ
- all of it
- அவை எல்லாம்
- wa-idhā
- وَإِذَا
- And when
- இன்னும் அவர்கள் சந்தித்தால்
- laqūkum
- لَقُوكُمْ
- they meet you
- இன்னும் அவர்கள் சந்தித்தால் உங்களை
- qālū
- قَالُوٓا۟
- they say
- கூறுகின்றனர்
- āmannā
- ءَامَنَّا
- "We believe"
- நம்பிக்கை கொண்டோம்
- wa-idhā khalaw
- وَإِذَا خَلَوْا۟
- And when they are alone
- இன்னும் அவர்கள் தனித்தால்
- ʿaḍḍū
- عَضُّوا۟
- they bite
- கடித்தனர்
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- at you
- உங்கள் மீது
- l-anāmila
- ٱلْأَنَامِلَ
- the finger tips
- விரல் நுனிகளை
- mina l-ghayẓi
- مِنَ ٱلْغَيْظِۚ
- (out) of [the] rage
- கோபத்தினால்
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- mūtū
- مُوتُوا۟
- Die
- சாவுங்கள்
- bighayẓikum
- بِغَيْظِكُمْۗ
- in your rage
- உங்கள்கோபத்தினால்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- (is) All-Knowing
- நன்கறிந்தவன்
- bidhāti
- بِذَاتِ
- of what
- உள்ளவற்றை
- l-ṣudūri
- ٱلصُّدُورِ
- (is in) the breasts"
- நெஞ்சங்களில்
Transliteration:
Haaa antum ulaaa'i tuhibboonahum wa laa yuhibboonakum wa tu'minoona bil kitaabi kullihee wa izaa laqookum qaalooo aamannaa wa izaa khalaw 'addoo 'alaikumul anaamila minal ghaiz; qul mootoo bighai zikum; innal laaha 'aleemum bizaatis sudoor(QS. ʾĀl ʿImrān:119)
English Sahih International:
Here you are loving them but they are not loving you, while you believe in the Scripture – all of it. And when they meet you, they say, "We believe." But when they are alone, they bite their fingertips at you in rage. Say, "Die in your rage. Indeed, Allah is Knowing of that within the breasts." (QS. Ali 'Imran, Ayah ௧௧௯)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௯)
Jan Trust Foundation
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது| “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் இவர்களை(யா) நேசிக்கிறீர்கள்! அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. வேதம் எல்லாவற்றையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். அவர்கள் உங்களைச் சந்தித்தால், "நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறுகின்றனர். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கின்றனர். (நபியே!) கூறுவீராக: "உங்கள் கோபத்தினால் சாவுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்."