௮௧
وَالَّذِيْ يُمِيْتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ ۙ ٨١
- wa-alladhī yumītunī
- وَٱلَّذِى يُمِيتُنِى
- அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான்
- thumma yuḥ'yīni
- ثُمَّ يُحْيِينِ
- பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௧)Tafseer
௮௨
وَالَّذِيْٓ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِيْ خَطِيْۤـَٔتِيْ يَوْمَ الدِّيْنِ ۗ ٨٢
- wa-alladhī
- وَٱلَّذِىٓ
- இன்னும் , எவன்
- aṭmaʿu
- أَطْمَعُ
- நான் ஆசிக்கிறேன்
- an yaghfira
- أَن يَغْفِرَ
- அவன் மன்னிக்க வேண்டும் என்று
- lī
- لِى
- எனக்கு
- khaṭīatī
- خَطِيٓـَٔتِى
- என் பாவங்களை
- yawma
- يَوْمَ
- நாளில்
- l-dīni
- ٱلدِّينِ
- விசாரணை
கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௨)Tafseer
௮௩
رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَّاَلْحِقْنِيْ بِالصّٰلِحِيْنَ ۙ ٨٣
- rabbi
- رَبِّ
- என் இறைவா!
- hab
- هَبْ
- வழங்கு!
- lī
- لِى
- எனக்கு
- ḥuk'man
- حُكْمًا
- தூதுத்துவத்தை
- wa-alḥiq'nī
- وَأَلْحِقْنِى
- இன்னும் என்னை சேர்ப்பாயாக!
- bil-ṣāliḥīna
- بِٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களுடன்
என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௩)Tafseer
௮௪
وَاجْعَلْ لِّيْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَ ۙ ٨٤
- wa-ij'ʿal
- وَٱجْعَل
- எற்படுத்து!
- lī
- لِّى
- எனக்கு
- lisāna ṣid'qin
- لِسَانَ صِدْقٍ
- நற்பெயரை
- fī l-ākhirīna
- فِى ٱلْءَاخِرِينَ
- பின்னோர்களில்
பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரையில் அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௪)Tafseer
௮௫
وَاجْعَلْنِيْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ ۙ ٨٥
- wa-ij'ʿalnī
- وَٱجْعَلْنِى
- என்னை ஆக்கிவிடு!
- min warathati
- مِن وَرَثَةِ
- வாரிசுகளில்
- jannati
- جَنَّةِ
- சொர்க்கத்தின்
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- இன்பமிகு
இன்ப சுகத்தையுடைய சுவனபதியை சொந்தம் கொள்பவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௫)Tafseer
௮௬
وَاغْفِرْ لِاَبِيْٓ اِنَّهٗ كَانَ مِنَ الضَّاۤلِّيْنَ ۙ ٨٦
- wa-igh'fir
- وَٱغْفِرْ
- மன்னிப்பளி!
- li-abī
- لِأَبِىٓ
- என் தந்தைக்கு
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- kāna
- كَانَ
- இருக்கிறார்
- mina l-ḍālīna
- مِنَ ٱلضَّآلِّينَ
- வழி தவறியவர்களில்
என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௬)Tafseer
௮௭
وَلَا تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَۙ ٨٧
- walā
- وَلَا
- இழிவுபடுத்திவிடாதே!
- tukh'zinī
- تُخْزِنِى
- இழிவுபடுத்திவிடாதே! என்னை
- yawma
- يَوْمَ
- நாளில்
- yub'ʿathūna
- يُبْعَثُونَ
- அவர்கள் எழுப்பப்படும்
(உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௭)Tafseer
௮௮
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۙ ٨٨
- yawma
- يَوْمَ
- நாளில்...
- lā yanfaʿu
- لَا يَنفَعُ
- பலனளிக்காத
- mālun
- مَالٌ
- செல்வமும்
- walā banūna
- وَلَا بَنُونَ
- ஆண் பிள்ளைகளும்
அந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௮)Tafseer
௮௯
اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ ۗ ٨٩
- illā
- إِلَّا
- எனினும்
- man
- مَنْ
- யார்
- atā
- أَتَى
- வந்தாரோ
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- biqalbin
- بِقَلْبٍ
- உள்ளத்தோடு
- salīmin
- سَلِيمٍ
- சந்தேகப்படாத
ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮௯)Tafseer
௯௦
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِيْنَ ۙ ٩٠
- wa-uz'lifati
- وَأُزْلِفَتِ
- சமீபமாக்கப்படும்
- l-janatu
- ٱلْجَنَّةُ
- சொர்க்கம்
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களுக்கு
இறை அச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சுவனபதி கொண்டு வரப்படும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௦)Tafseer