Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 3

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௨௧

فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِيْ رَبِّيْ حُكْمًا وَّجَعَلَنِيْ مِنَ الْمُرْسَلِيْنَ ٢١

fafarartu
فَفَرَرْتُ
நான் ஓடிவிட்டேன்
minkum
مِنكُمْ
உங்களை விட்டு
lammā khif'tukum
لَمَّا خِفْتُكُمْ
உங்களை நான் பயந்தபோது
fawahaba
فَوَهَبَ
ஆகவே,வழங்கினான்
لِى
எனக்கு
rabbī
رَبِّى
என் இறைவன்
ḥuk'man
حُكْمًا
தூதுவத்தை
wajaʿalanī
وَجَعَلَنِى
இன்னும் என்னை ஆக்கினான்
mina l-mur'salīna
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் ஒருவராக
ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என்னுடைய இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன்னுடைய தூதராகவும் ஆக்கினான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧)
Tafseer
௨௨

وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ اَنْ عَبَّدْتَّ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ ٢٢

watil'ka
وَتِلْكَ
அது
niʿ'matun
نِعْمَةٌ
ஓர் உபகாரம்தான்
tamunnuhā
تَمُنُّهَا
நீ சொல்லிக் காட்டுகின்றாய்/அதை
ʿalayya
عَلَىَّ
என் மீது
an ʿabbadtta
أَنْ عَبَّدتَّ
அடிமையாக்கி வைத்திருக்கிறாய்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௨)
Tafseer
௨௩

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَ ۗ ٢٣

qāla
قَالَ
கூறினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
wamā rabbu
وَمَا رَبُّ
இறைவன் யார்?
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அதற்குப் ஃபிர்அவ்ன் "உலகத்தாரின் இறைவன் யார்?" என்று கேட்டான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௩)
Tafseer
௨௪

قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاۗ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ ٢٤

qāla
قَالَ
கூறினார்
rabbu
رَبُّ
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mūqinīna
مُّوقِنِينَ
உறுதிகொள்பவர்களாக
அதற்கு (மூஸா) "வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன் தான் (உலகத்தாரை படைப்பவனும் வளர்ப்பவனும் ஆவான்). இவ்வுண்மையை நீங்கள் நம்புவீர்களா?" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௪)
Tafseer
௨௫

قَالَ لِمَنْ حَوْلَهٗٓ اَلَا تَسْتَمِعُوْنَ ٢٥

qāla
قَالَ
அவன் கூறினான்
liman ḥawlahu
لِمَنْ حَوْلَهُۥٓ
தன்னை சுற்றி உள்ளவர்களிடம்
alā tastamiʿūna
أَلَا تَسْتَمِعُونَ
நீங்கள் செவிமடுக்கிறீர்களா?
அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி "நீங்கள் இதனைச் செவியுறவில்லையா?" என்று கூறினான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௫)
Tafseer
௨௬

قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَاۤىِٕكُمُ الْاَوَّلِيْنَ ٢٦

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
warabbu
وَرَبُّ
இன்னும் இறைவன்
ābāikumu
ءَابَآئِكُمُ
உங்கள் மூதாதைகளின்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான
அதற்கவர் "(அவன்) உங்கள் இறைவன் (மட்டும் அன்று; உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் (அவன்தான்)" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௬)
Tafseer
௨௭

قَالَ اِنَّ رَسُوْلَكُمُ الَّذِيْٓ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ ٢٧

qāla
قَالَ
அவன் கூறினான்
inna
إِنَّ
நிச்சயமாக
rasūlakumu
رَسُولَكُمُ
உங்கள் தூதர்
alladhī ur'sila
ٱلَّذِىٓ أُرْسِلَ
எவர்/அனுப்பப்பட்ட
ilaykum
إِلَيْكُمْ
உங்களிடம்
lamajnūnun
لَمَجْنُونٌ
கண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) "உங்களிடம் அனுப்பப்பட்ட (தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்" என்று சொன்னான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௭)
Tafseer
௨௮

قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَاۗ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ٢٨

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbu
رَبُّ
இறைவன்
l-mashriqi
ٱلْمَشْرِقِ
கிழக்கு திசை
wal-maghribi
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கு திசை
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டுக்கும்இடையில்உள்ளவற்றின்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿqilūna
تَعْقِلُونَ
சிந்தித்துபுரிபவர்களாக
அதற்கு (மூஸா) "கீழ் நாட்டையும் மேல் நாட்டையும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களையும் படைத்து காப்பவன் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௮)
Tafseer
௨௯

قَالَ لَىِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَيْرِيْ لَاَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُوْنِيْنَ ٢٩

qāla
قَالَ
அவன் கூறினான்
la-ini ittakhadhta
لَئِنِ ٱتَّخَذْتَ
நீர் எடுத்துக் கொண்டால்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
ghayrī
غَيْرِى
என்னைஅன்றிவேறு
la-ajʿalannaka
لَأَجْعَلَنَّكَ
உம்மையும் ஆக்கி விடுவேன்
mina l-masjūnīna
مِنَ ٱلْمَسْجُونِينَ
சிறைப்படுத்தப்பட்டவர்களில்
அதற்கவன் "என்னைத் தவிர (மற்றெதனையும்) நீங்கள் இறைவனாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உங்களை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்" என்று கூறினான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௯)
Tafseer
௩௦

قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَيْءٍ مُّبِيْنٍ ٣٠

qāla
قَالَ
அவர் கூறினார்
awalaw ji'tuka
أَوَلَوْ جِئْتُكَ
நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?
bishayin mubīnin
بِشَىْءٍ مُّبِينٍ
தெளிவான ஒன்றை
அதற்கவர் "தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்தபோதிலுமா?" என்று கேட்டார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௦)
Tafseer