Skip to content

ஸூரா ஸூரத்துந் நூர் - Page: 3

An-Nur

(an-Nūr)

௨௧

۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَأْمُرُ بِالْفَحْشَاۤءِ وَالْمُنْكَرِۗ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًاۙ وَّلٰكِنَّ اللّٰهَ يُزَكِّيْ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ٢١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tattabiʿū
لَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
khuṭuwāti
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
waman
وَمَن
யார்
yattabiʿ
يَتَّبِعْ
பின்பற்றுகிறானோ
khuṭuwāti
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yamuru
يَأْمُرُ
ஏவுகிறான்
bil-faḥshāi
بِٱلْفَحْشَآءِ
அசிங்கத்தையும்
wal-munkari
وَٱلْمُنكَرِۚ
கெட்டதையும்
walawlā
وَلَوْلَا
இல்லாதிருந்தால்
faḍlu
فَضْلُ
அருளும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
அவனது கருணையும்
mā zakā
مَا زَكَىٰ
தூய்மை அடைந்திருக்க மாட்டார்
minkum
مِنكُم
உங்களில்
min aḥadin
مِّنْ أَحَدٍ
எவரும்
abadan
أَبَدًا
ஒரு போதும்
walākinna l-laha
وَلَٰكِنَّ ٱللَّهَ
எனினும் அல்லாஹ்
yuzakkī
يُزَكِّى
பரிசுத்தப்படுத்துகிறான்
man yashāu
مَن يَشَآءُۗ
தான் நாடியவரை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள்மீது இல்லா திருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௧)
Tafseer
௨௨

وَلَا يَأْتَلِ اُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْٓا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۖوَلْيَعْفُوْا وَلْيَصْفَحُوْاۗ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٢٢

walā yatali
وَلَا يَأْتَلِ
சத்தியம் செய்ய வேண்டாம்
ulū l-faḍli
أُو۟لُوا۟ ٱلْفَضْلِ
செல்வம் உடையவர்கள்
minkum
مِنكُمْ
உங்களில்
wal-saʿati
وَٱلسَّعَةِ
இன்னும் வசதி
an yu'tū
أَن يُؤْتُوٓا۟
அவர்கள் கொடுக்க
ulī l-qur'bā
أُو۟لِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கு
wal-masākīna
وَٱلْمَسَٰكِينَ
இன்னும் வறியவர்களுக்கு
wal-muhājirīna
وَٱلْمُهَٰجِرِينَ
இன்னும் ஹிஜ்ரா சென்றவர்களுக்கு
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
walyaʿfū
وَلْيَعْفُوا۟
அவர்கள் மன்னிக்கட்டும்
walyaṣfaḥū
وَلْيَصْفَحُوٓا۟ۗ
பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும்
alā tuḥibbūna
أَلَا تُحِبُّونَ
விரும்ப மாட்டீர்களா?
an yaghfira
أَن يَغْفِرَ
மன்னிப்பதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْۗ
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையுடையவன்
உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௨)
Tafseer
௨௩

اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ۙ ٢٣

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yarmūna
ٱلَّذِينَ يَرْمُونَ
குற்றம் சுமத்துகிறார்களோ
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
பத்தினிகள்
l-ghāfilāti
ٱلْغَٰفِلَٰتِ
அறியாத பெண்கள்
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கைகொண்ட பெண்கள்
luʿinū
لُعِنُوا۟
சபிக்கப்பட்டார்கள்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
உலகத்திலும்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
மறுமையிலும்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
ʿaẓīmun
عَظِيمٌ
பெரிய
எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். அன்றி, அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௩)
Tafseer
௨௪

يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ٢٤

yawma
يَوْمَ
நாளில்
tashhadu
تَشْهَدُ
சாட்சி பகரும்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
alsinatuhum
أَلْسِنَتُهُمْ
அவர்களது நாவுகளும்
wa-aydīhim
وَأَيْدِيهِمْ
அவர்களதுகரங்களும்
wa-arjuluhum
وَأَرْجُلُهُم
அவர்களதுகால்களும்
bimā kānū
بِمَا كَانُوا۟
எதை/இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கின்றார்கள்
(நபியே! ஒரு நாளை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவைகளைப் பற்றி சாட்சியம் கூறும். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௪)
Tafseer
௨௫

يَوْمَىِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِيْنُ ٢٥

yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yuwaffīhimu
يُوَفِّيهِمُ
அவர்களுக்கு முழுமையாக தருவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
dīnahumu
دِينَهُمُ
அவர்களுடைய கூலியை
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையான
wayaʿlamūna
وَيَعْلَمُونَ
இன்னும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்தான்
huwa l-ḥaqu
هُوَ ٱلْحَقُّ
உண்மையானவன்
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவானவன்
அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளனும் (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன்தான் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௫)
Tafseer
௨௬

اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِۚ اُولٰۤىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ࣖ ٢٦

al-khabīthātu
ٱلْخَبِيثَٰتُ
கெட்ட சொற்கள்
lil'khabīthīna
لِلْخَبِيثِينَ
கெட்டவர்களுக்கு உரியன
wal-khabīthūna
وَٱلْخَبِيثُونَ
இன்னும் கெட்டவர்கள்
lil'khabīthāti
لِلْخَبِيثَٰتِۖ
கெட்ட சொற்களுக்கு உரியவர்கள்
wal-ṭayibātu
وَٱلطَّيِّبَٰتُ
இன்னும் நல்ல சொற்கள்
lilṭṭayyibīna
لِلطَّيِّبِينَ
நல்லவர்களுக்கு உரியன
wal-ṭayibūna
وَٱلطَّيِّبُونَ
இன்னும் நல்லவர்கள்
lilṭṭayyibāti
لِلطَّيِّبَٰتِۚ
நல்ல சொற்களுக்கு உரியவர்கள்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
mubarraūna
مُبَرَّءُونَ
நீக்கப்பட்டவர்கள்
mimmā yaqūlūna
مِمَّا يَقُولُونَۖ
இவர்கள் சொல்வதிலிருந்து
lahum
لَهُم
அவர்களுக்கு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பும்
wariz'qun
وَرِزْقٌ
அருட்கொடையும்
karīmun
كَرِيمٌ
கண்ணியமான
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தாம் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர்.இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௬)
Tafseer
௨௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَأْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَاۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ٢٧

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tadkhulū
لَا تَدْخُلُوا۟
நீங்கள் நுழையாதீர்கள்
buyūtan
بُيُوتًا
வீடுகளில்
ghayra buyūtikum
غَيْرَ بُيُوتِكُمْ
உங்கள் வீடுகள் அல்லாத
ḥattā
حَتَّىٰ
வரை
tastanisū
تَسْتَأْنِسُوا۟
நீங்கள் அனுமதி பெறுகின்ற
watusallimū
وَتُسَلِّمُوا۟
இன்னும் நீங்கள் ஸலாம் கூறி
ʿalā ahlihā
عَلَىٰٓ أَهْلِهَاۚ
அவ்வீட்டார்களுக்கு
dhālikum
ذَٰلِكُمْ
அதுதான்
khayrun
خَيْرٌ
சிறந்தது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
laʿallakum tadhakkarūna
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக! ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௭)
Tafseer
௨௮

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَآ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَكُمْ وَاِنْ قِيْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰى لَكُمْ ۗوَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ٢٨

fa-in lam tajidū
فَإِن لَّمْ تَجِدُوا۟
நீங்கள் காணவில்லையெனில்
fīhā
فِيهَآ
அவற்றில்
aḥadan
أَحَدًا
ஒருவரையும்
falā tadkhulūhā
فَلَا تَدْخُلُوهَا
அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள்
ḥattā yu'dhana
حَتَّىٰ يُؤْذَنَ
அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
wa-in qīla
وَإِن قِيلَ
சொல்லப்பட்டால்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
ir'jiʿū
ٱرْجِعُوا۟
திரும்பி விடுங்கள்
fa-ir'jiʿū
فَٱرْجِعُوا۟ۖ
திரும்பி விடுங்கள்
huwa
هُوَ
அது
azkā
أَزْكَىٰ
மிக சுத்தமானது
lakum
لَكُمْۚ
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் அதில் நுழையாதீர்கள். (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) "நீங்கள் திரும்பிவிடுங்கள்" என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௮)
Tafseer
௨௯

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ مَسْكُوْنَةٍ فِيْهَا مَتَاعٌ لَّكُمْۗ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ٢٩

laysa ʿalaykum
لَّيْسَ عَلَيْكُمْ
உங்கள் மீது இல்லை
junāḥun
جُنَاحٌ
குற்றம்
an tadkhulū
أَن تَدْخُلُوا۟
நீங்கள் நுழைவது
buyūtan
بُيُوتًا
வீடுகளில்
ghayra maskūnatin
غَيْرَ مَسْكُونَةٍ
வசிக்கப்படாத
fīhā
فِيهَا
அவற்றில்
matāʿun
مَتَٰعٌ
பொருள்
lakum
لَّكُمْۚ
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā tub'dūna
مَا تُبْدُونَ
நீங்கள்வெளிப்படுத்துவதை
wamā taktumūna
وَمَا تَكْتُمُونَ
நீங்கள் மறைப்பதை
(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத யாதொரு வீட்டில் உங்களுடைய சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௯)
Tafseer
௩௦

قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْۗ ذٰلِكَ اَزْكٰى لَهُمْۗ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَعُوْنَ ٣٠

qul
قُل
கூறுங்கள்
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
yaghuḍḍū
يَغُضُّوا۟
அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
min abṣārihim
مِنْ أَبْصَٰرِهِمْ
தங்கள் பார்வைகளை
wayaḥfaẓū
وَيَحْفَظُوا۟
இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
furūjahum
فُرُوجَهُمْۚ
தங்கள் மறைவிடங்களை
dhālika
ذَٰلِكَ
அது
azkā
أَزْكَىٰ
மிக சுத்தமானது
lahum
لَهُمْۗ
அவர்களுக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
bimā yaṣnaʿūna
بِمَا يَصْنَعُونَ
அவர்கள் செய்வதை
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௦)
Tafseer