Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 9

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௮௧

وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِيْ بِاَمْرِهٖٓ اِلَى الْاَرْضِ الَّتِيْ بٰرَكْنَا فِيْهَاۗ وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عٰلِمِيْنَ ٨١

walisulaymāna
وَلِسُلَيْمَٰنَ
இன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்)
l-rīḥa
ٱلرِّيحَ
காற்றை
ʿāṣifatan
عَاصِفَةً
கடுமையாகவீசக்கூடிய
tajrī
تَجْرِى
செல்லும்
bi-amrihi
بِأَمْرِهِۦٓ
அவருடைய கட்டளையின்படி
ilā l-arḍi
إِلَى ٱلْأَرْضِ
பூமியின் பக்கம்
allatī
ٱلَّتِى
எது
bāraknā
بَٰرَكْنَا
நாம் அருள்வளம் புரிந்தோம்
fīhā
فِيهَاۚ
அதில்
wakunnā
وَكُنَّا
இன்னும் நாம் இருந்தோம்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿālimīna
عَٰلِمِينَ
அறிந்தவர்களாக
ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௧)
Tafseer
௮௨

وَمِنَ الشَّيٰطِيْنِ مَنْ يَّغُوْصُوْنَ لَهٗ وَيَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِيْنَ ۙ ٨٢

wamina l-shayāṭīni
وَمِنَ ٱلشَّيَٰطِينِ
இன்னும் ஷைத்தான்களில்
man yaghūṣūna
مَن يَغُوصُونَ
எவர்/மூழ்கின்றார்கள்
lahu
لَهُۥ
அவருக்காக
wayaʿmalūna
وَيَعْمَلُونَ
இன்னும் செய்கின்றார்கள்
ʿamalan
عَمَلًا
செயலை
dūna
دُونَ
அல்லாத
dhālika
ذَٰلِكَۖ
அது
wakunnā
وَكُنَّا
நாம் இருந்தோம்
lahum
لَهُمْ
அவர்களை
ḥāfiẓīna
حَٰفِظِينَ
பாதுகாப்பவர்களாக
கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவைகளைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத்தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்து கொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௨)
Tafseer
௮௩

۞ وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗٓ اَنِّيْ مَسَّنِيَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ ۚ ٨٣

wa-ayyūba
وَأَيُّوبَ
இன்னும் அய்யூபை நினைவு கூர்வீராக
idh nādā
إِذْ نَادَىٰ
அழைத்தபோது
rabbahu
رَبَّهُۥٓ
தன் இறைவனை
annī
أَنِّى
நிச்சயமாக நான்
massaniya
مَسَّنِىَ
என்னை தொட்டுவிட்டன
l-ḍuru
ٱلضُّرُّ
தீங்குகள்
wa-anta
وَأَنتَ
நீயோ
arḥamu
أَرْحَمُ
மகா கருணையாளன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்
அய்யூபையும் (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கிவிடு.) நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மகா கிருபையாளன்" என்று பிரார்த்தனை செய்தார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௩)
Tafseer
௮௪

فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ ۚ ٨٤

fa-is'tajabnā
فَٱسْتَجَبْنَا
ஆகவே, நாம் பதிலளித்தோம்
lahu
لَهُۥ
அவருக்கு
fakashafnā
فَكَشَفْنَا
அகற்றினோம்
mā bihi
مَا بِهِۦ
அவருக்கு இருந்த
min ḍurrin
مِن ضُرٍّۖ
தீங்குகளை
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்கு வழங்கினோம்
ahlahu
أَهْلَهُۥ
அவருடைய குடும்பத்தை
wamith'lahum
وَمِثْلَهُم
அவர்கள் போன்றவர்களை
maʿahum
مَّعَهُمْ
அவர்களுடன்
raḥmatan
رَحْمَةً
கருணையாக
min ʿindinā
مِّنْ عِندِنَا
நம் புறத்திலிருந்து
wadhik'rā
وَذِكْرَىٰ
இன்னும் நினைவூட்டலாகும்
lil'ʿābidīna
لِلْعَٰبِدِينَ
வணக்கசாலிகளுக்கு
ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் பின்னும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இஃது (எனக்குப் பயந்து) என்னை வணங்கு லிபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௪)
Tafseer
௮௫

وَاِسْمٰعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِۗ كُلٌّ مِّنَ الصّٰبِرِيْنَ ۙ ٨٥

wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக
wa-id'rīsa
وَإِدْرِيسَ
இத்ரீஸையும்
wadhā l-kif'li
وَذَا ٱلْكِفْلِۖ
துல்கிஃப்லையும்
kullun
كُلٌّ
எல்லோரும்
mina l-ṣābirīna
مِّنَ ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லுவையும் (நாம் நம்முடைய தூதர்களாக அனுப்பி வைத்தோம்.) இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டனர். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௫)
Tafseer
௮௬

وَاَدْخَلْنٰهُمْ فِيْ رَحْمَتِنَاۗ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِيْنَ ٨٦

wa-adkhalnāhum
وَأَدْخَلْنَٰهُمْ
இவர்களை நுழைத்துக் கொண்டோம்
fī raḥmatinā
فِى رَحْمَتِنَآۖ
நமது அருளில்
innahum
إِنَّهُم
நிச்சயமாக இவர்கள்
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் உள்ளவர்கள்
ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம்முடைய அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லோர்களே. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௬)
Tafseer
௮௭

وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّآ اِلٰهَ اِلَّآ اَنْتَ سُبْحٰنَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ ۚ ٨٧

wadhā l-nūni
وَذَا ٱلنُّونِ
மீனுடையவரை நினைவு கூர்வீராக
idh dhahaba
إِذ ذَّهَبَ
அவர் சென்றபோது
mughāḍiban
مُغَٰضِبًا
கோபித்தவராக
faẓanna
فَظَنَّ
எண்ணினார்
an lan naqdira
أَن لَّن نَّقْدِرَ
நெருக்கடியை கொடுக்கவே மாட்டோம்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு
fanādā
فَنَادَىٰ
அவர் அழைத்தார்
fī l-ẓulumāti
فِى ٱلظُّلُمَٰتِ
இருள்களில் இருந்தவராக
an lā
أَن لَّآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّآ
தவிர
anta
أَنتَ
உன்னை
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
நீ மகா பரிசுத்தமானவன்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
kuntu
كُنتُ
சேர்ந்து விட்டேன்
mina l-ẓālimīna
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்
(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௭)
Tafseer
௮௮

فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّۗ وَكَذٰلِكَ نُـْۨجِى الْمُؤْمِنِيْنَ ٨٨

fa-is'tajabnā
فَٱسْتَجَبْنَا
நாம் பதிலளித்தோம்
lahu
لَهُۥ
அவருக்கு
wanajjaynāhu
وَنَجَّيْنَٰهُ
அவரை நாம் பாதுகாத்தோம்
mina l-ghami
مِنَ ٱلْغَمِّۚ
துக்கத்திலிருந்து
wakadhālika
وَكَذَٰلِكَ
இப்படித்தான்
nunjī
نُۨجِى
நாம் பாதுகாப்போம்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) கஷ்டத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (கஷ்டத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௮)
Tafseer
௮௯

وَزَكَرِيَّآ اِذْ نَادٰى رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِيْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ ۚ ٨٩

wazakariyyā
وَزَكَرِيَّآ
இன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராக
idh nādā
إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
rabbahu
رَبَّهُۥ
தன் இறைவனை
rabbi
رَبِّ
என் இறைவா
lā tadharnī
لَا تَذَرْنِى
என்னை விட்டுவிடாதே
fardan
فَرْدًا
ஒருத்தனாக
wa-anta
وَأَنتَ
நீதான்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-wārithīna
ٱلْوَٰرِثِينَ
வாரிசுகளில்
ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் தன் இறைவனை நோக்கி "என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக்கூடிய வர்களில் மிக்க மேலானவன்" என்று பிரார்த்தனை செய்த சமயத்தில், ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௮௯)
Tafseer
௯௦

فَاسْتَجَبْنَا لَهٗ ۖوَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗۗ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِى الْخَيْرٰتِ وَيَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًاۗ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ ٩٠

fa-is'tajabnā
فَٱسْتَجَبْنَا
நாம் பதிலளித்தோம்
lahu
لَهُۥ
அவருக்கு
wawahabnā
وَوَهَبْنَا
இன்னும் வழங்கினோம்
lahu
لَهُۥ
அவருக்கு
yaḥyā
يَحْيَىٰ
யஹ்யாவை
wa-aṣlaḥnā
وَأَصْلَحْنَا
இன்னும் சீர்படுத்தினோம்
lahu
لَهُۥ
அவருக்கு
zawjahu
زَوْجَهُۥٓۚ
அவருடைய மனைவியை
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
விரைகின்றவர்களாக
fī l-khayrāti
فِى ٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
wayadʿūnanā
وَيَدْعُونَنَا
இன்னும் நம்மை அழைக்கின்றவர்களாக
raghaban
رَغَبًا
ஆர்வத்துடனும்
warahaban
وَرَهَبًاۖ
பயத்துடனும்
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
lanā
لَنَا
நம்மிடம்
khāshiʿīna
خَٰشِعِينَ
பணிவுள்ளவர்களாக
நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம்முடைய தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௦)
Tafseer