Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௦

Qur'an Surah Al-Anbya Verse 90

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاسْتَجَبْنَا لَهٗ ۖوَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗۗ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِى الْخَيْرٰتِ وَيَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًاۗ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ (الأنبياء : ٢١)

fa-is'tajabnā
فَٱسْتَجَبْنَا
So We responded
நாம் பதிலளித்தோம்
lahu
لَهُۥ
to him
அவருக்கு
wawahabnā
وَوَهَبْنَا
and We bestowed
இன்னும் வழங்கினோம்
lahu
لَهُۥ
on him
அவருக்கு
yaḥyā
يَحْيَىٰ
Yahya
யஹ்யாவை
wa-aṣlaḥnā
وَأَصْلَحْنَا
and We cured
இன்னும் சீர்படுத்தினோம்
lahu
لَهُۥ
for him
அவருக்கு
zawjahu
زَوْجَهُۥٓۚ
his wife
அவருடைய மனைவியை
innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
used (to)
இருந்தனர்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
hasten
விரைகின்றவர்களாக
fī l-khayrāti
فِى ٱلْخَيْرَٰتِ
in good deeds
நன்மைகளில்
wayadʿūnanā
وَيَدْعُونَنَا
and they supplicate to Us
இன்னும் நம்மை அழைக்கின்றவர்களாக
raghaban
رَغَبًا
(in) hope
ஆர்வத்துடனும்
warahaban
وَرَهَبًاۖ
and fear
பயத்துடனும்
wakānū
وَكَانُوا۟
and they were
இன்னும் இருந்தனர்
lanā
لَنَا
to Us
நம்மிடம்
khāshiʿīna
خَٰشِعِينَ
humbly submissive
பணிவுள்ளவர்களாக

Transliteration:

Fastajabnaa lahoo wa wahabnaa lahoo Yahyaa Wa aslahnaa lahoo zawjah; innahum kaanoo yusaari'oona fil khairaati wa yad'oonanaa raghabanw wa rahabaa; wa kaanoo lanaa khaashi'een (QS. al-ʾAnbiyāʾ:90)

English Sahih International:

So We responded to him, and We gave to him John, and amended for him his wife. Indeed, they used to hasten to good deeds and supplicate Us in hope and fear, and they were to Us humbly submissive. (QS. Al-Anbya, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம்முடைய தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௦)

Jan Trust Foundation

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருக்கு நாம் பதிலளித்தோம். அவருக்கு யஹ்யாவை வழங்கினோம். அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் நன்மைகளில் விரைகின்றவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைக்கின்றவர்களாக (-வணங்குகின்றவர்களாக) இருந்தனர். இன்னும் அவர்கள் நம்மிடம் பணிவுள்ளவர்களாக இருந்தனர்.