குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯௬
Qur'an Surah Al-Baqarah Verse 96
ஸூரத்துல் பகரா [௨]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ ۛوَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا ۛيَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَلْفَ سَنَةٍۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ ࣖ (البقرة : ٢)
- walatajidannahum
- وَلَتَجِدَنَّهُمْ
- And surely you will find them
- நிச்சயமாகக் காண்பீர்/அவர்களை
- aḥraṣa
- أَحْرَصَ
- (the) most greedy
- பேராசைக்காரர்(களாக)
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) [the] mankind
- மக்களை விட
- ʿalā
- عَلَىٰ
- for
- மீது
- ḥayatin
- حَيَوٰةٍ
- life
- வாழ்க்கை
- wamina
- وَمِنَ
- and (greedier) than
- இன்னும் விட
- alladhīna ashrakū
- ٱلَّذِينَ أَشْرَكُوا۟ۚ
- those who associate[d] partners (with Allah)
- இணைவைப்பவர்கள்
- yawaddu
- يَوَدُّ
- Loves
- விரும்புவார்
- aḥaduhum
- أَحَدُهُمْ
- (each) one of them
- ஒருவர்/அவர்களில்
- law yuʿammaru
- لَوْ يُعَمَّرُ
- if he could be granted a life
- வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே
- alfa
- أَلْفَ
- (of) a thousand
- ஆயிரம்
- sanatin
- سَنَةٍ
- year(s)
- ஆண்டு(கள்)
- wamā
- وَمَا
- But not
- இன்னும் இல்லை
- huwa
- هُوَ
- it
- அது
- bimuzaḥziḥihi
- بِمُزَحْزِحِهِۦ
- (will) remove him
- தப்பிக்க வைத்துவிடக் கூடியது/அவனை
- mina l-ʿadhābi
- مِنَ ٱلْعَذَابِ
- from the punishment
- வேதனையிலிருந்து
- an yuʿammara
- أَن يُعَمَّرَۗ
- that he should be granted life
- வாழ்வு கொடுக்கப்படுவது
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- baṣīrun
- بَصِيرٌۢ
- (is) All-Seer
- உற்று நோக்குபவன்
- bimā yaʿmalūna
- بِمَا يَعْمَلُونَ
- of what they do
- எதை/செய்கிறார்கள்
Transliteration:
Wa latajidannahum ahrasannaasi 'alaa hayaatinw wa minal lazeena ashrakoo; yawaddu ahaduhum law yu'ammaru alfa sanatinw wa maa huwa bi muzahzihihee minal 'azaabi ai yu'ammar; wallaahu baseerum bimaa ya'maloon(QS. al-Baq̈arah:96)
English Sahih International:
And you will surely find them the most greedy of people for life – [even] more than those who associate others with Allah. One of them wishes that he could be granted life a thousand years, but it would not remove him in the least from the [coming] punishment that he should be granted life. And Allah is Seeing of what they do. (QS. Al-Baqarah, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
அன்றி, (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகளை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! அவர்களில் ஒவ்வொருவனும் "நான் ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ வேண்டுமே?" என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) யிருடன் இருக்க அவனை விட்டு வைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிட மாட்டாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௯௬)
Jan Trust Foundation
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை நிச்சயமாகக் காண்பீர்! அவர்களில் ஒருவர் "தான் ஆயிரம் ஆண்டு(கள்) வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே?" என்று விரும்புவார். (நீண்ட நாள்) வாழ்வு கொடுக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தப்பிக்க வைத்துவிடக்கூடியதில்லை. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.