Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮௮

Qur'an Surah Al-Baqarah Verse 88

ஸூரத்துல் பகரா [௨]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ ۗ بَلْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِيْلًا مَّا يُؤْمِنُوْنَ (البقرة : ٢)

waqālū
وَقَالُوا۟
And they said
இன்னும் கூறினார்கள்
qulūbunā
قُلُوبُنَا
"Our hearts
உள்ளங்கள்/எங்கள்
ghul'fun
غُلْفٌۢۚ
(are) wrapped"
திரையிடப்பட்டுள்ளன
bal
بَل
Nay
மாறாக
laʿanahumu
لَّعَنَهُمُ
has cursed them
அவர்களை சபித்தான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bikuf'rihim
بِكُفْرِهِمْ
for their disbelief
நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய
faqalīlan mā
فَقَلِيلًا مَّا
so little (is) what
எனவே மிகக் குறைவாகவே
yu'minūna
يُؤْمِنُونَ
they believe
நம்பிக்கை கொள்வார்கள்

Transliteration:

Wa qaaloo quloobunaa ghulf; bal la'anahumul laahu bikufrihim faqaleelam maa yu'minoon (QS. al-Baq̈arah:88)

English Sahih International:

And they said, "Our hearts are wrapped." But, [in fact], Allah has cursed them for their disbelief, so little is it that they believe. (QS. Al-Baqarah, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

"எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். ஆதலால் அவர்கள் நம்பிக்கை கொள்வது வெகு சொற்பமே! (ஸூரத்துல் பகரா, வசனம் ௮௮)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். எனவே, மிகக் குறைவாகவே (அவர்கள்) நம்பிக்கை கொள்வார்கள்.