குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮௦
Qur'an Surah Al-Baqarah Verse 80
ஸூரத்துல் பகரா [௨]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدَةً ۗ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗٓ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ (البقرة : ٢)
- waqālū
- وَقَالُوا۟
- And they say
- இன்னும் கூறினர்
- lan tamassanā
- لَن تَمَسَّنَا
- "Never will touch us
- எங்களை அறவே தீண்டாது
- l-nāru
- ٱلنَّارُ
- the Fire
- நரக நெருப்பு
- illā
- إِلَّآ
- except
- தவிர
- ayyāman
- أَيَّامًا
- (for) days
- நாள்களை
- maʿdūdatan
- مَّعْدُودَةًۚ
- numbered"
- எண்ணப்பட்டவை
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- attakhadhtum
- أَتَّخَذْتُمْ
- "Have you taken
- எடுத்துக் கொண்டீர்களா?
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்விடம்
- ʿahdan
- عَهْدًا
- a covenant
- ஓர் உறுதிமொழியை
- falan yukh'lifa
- فَلَن يُخْلِفَ
- so never will break
- மாற்றவே மாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿahdahu
- عَهْدَهُۥٓۖ
- His Covenant?
- உறுதிமொழியை/தன்
- am
- أَمْ
- Or
- அல்லது
- taqūlūna
- تَقُولُونَ
- (do) you say
- கூறுகிறீர்கள்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்வின் மீது
- mā
- مَا
- what
- எதை
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- not you know?"
- அறியமாட்டீர்கள்
Transliteration:
Wa qaaloo lan tamassanan Naaru illaaa ayyaamam ma'doo dah; qul attakhaztum 'indal laahi 'ahdan falai yukhlifal laahu 'ahdahooo am taqooloona 'alal laahi maa laa ta'lamoon(QS. al-Baq̈arah:80)
English Sahih International:
And they say, "Never will the Fire touch us, except for [a few] numbered days." Say, "Have you taken a covenant with Allah? For Allah will never break His covenant. Or do you say about Allah that which you do not know?" (QS. Al-Baqarah, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா? (ஸூரத்துல் பகரா, வசனம் ௮௦)
Jan Trust Foundation
“ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"எண்ணப்பட்ட (சில) நாள்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது" எனக் கூறினர். (அதற்கு நபியே) கூறுவீராக: அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உறுதிமொழியை (நீங்கள்) எடுத்துக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை மாற்றவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா?