குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௬௭
Qur'an Surah Al-Baqarah Verse 67
ஸூரத்துல் பகரா [௨]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖٓ اِنَّ اللّٰهَ يَأْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ۗ قَالُوْٓا اَتَتَّخِذُنَا هُزُوًا ۗ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ (البقرة : ٢)
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- And when said
- இன்னும் சமயம்/கூறினார்
- mūsā
- مُوسَىٰ
- Musa
- மூசா
- liqawmihi
- لِقَوْمِهِۦٓ
- to his people
- சமுதாயத்திற்கு/தன்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- "Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yamurukum
- يَأْمُرُكُمْ
- commands you
- ஏவுகிறான்/உங்களை
- an tadhbaḥū
- أَن تَذْبَحُوا۟
- that you slaughter
- நீங்கள் அறுப்பதற்கு
- baqaratan
- بَقَرَةًۖ
- a cow"
- ஒரு பசுவை
- qālū
- قَالُوٓا۟
- They said
- கூறினார்கள்
- atattakhidhunā
- أَتَتَّخِذُنَا
- "Do you take us
- எடுத்துக் கொள்கிறீரா?/எங்களை
- huzuwan
- هُزُوًاۖ
- (in) ridicule"
- பரிகாசமாக
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- aʿūdhu
- أَعُوذُ
- "I seek refuge
- பாதுகாப்புத் தேடுகிறேன்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்விடம்
- an akūna
- أَنْ أَكُونَ
- that I be
- நான் ஆகுவதை விட்டு
- mina l-jāhilīna
- مِنَ ٱلْجَٰهِلِينَ
- among the ignorant"
- அறிவிலிகளில்
Transliteration:
Wa iz qaala Moosaa liqawmiheee innal laaha yaamurukum an tazbahoo baqaratan qaalooo atattakhizunna huzuwan qaala a'oozu billaahi an akoona minal jaahileen(QS. al-Baq̈arah:67)
English Sahih International:
And [recall] when Moses said to his people, "Indeed, Allah commands you to slaughter a cow." They said, "Do you take us in ridicule?" He said, "I seek refuge in Allah from being among the ignorant." (QS. Al-Baqarah, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். (ஸூரத்துல் பகரா, வசனம் ௬௭)
Jan Trust Foundation
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்" என மூசா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கவர்கள் மூசாவே!) "எங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா?" எனக் கூறினார்கள். "அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" எனக் கூறினார் (மூசா).