Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௬௨

Qur'an Surah Al-Baqarah Verse 62

ஸூரத்துல் பகரா [௨]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَالصَّابِــِٕيْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ (البقرة : ٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believed
நம்பிக்கையாளர்கள்
wa-alladhīna hādū
وَٱلَّذِينَ هَادُوا۟
and those who became Jews
இன்னும் யூதர்கள்
wal-naṣārā
وَٱلنَّصَٰرَىٰ
and the Christians
இன்னும் கிறித்தவர்கள்
wal-ṣābiīna
وَٱلصَّٰبِـِٔينَ
and the Sabians -
இன்னும் ஸாபியீன்கள்
man
مَنْ
who
எவர்
āmana
ءَامَنَ
believed
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
and the Day [the] Last
இன்னும் இறுதி நாளை
waʿamila
وَعَمِلَ
and did
இன்னும் செய்தார்
ṣāliḥan
صَٰلِحًا
righteous deeds
நன்மையை
falahum
فَلَهُمْ
so for them
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
(is) their reward
கூலி/அவர்களின்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
with their Lord
அவர்களின் இறைவனிடம்
walā khawfun
وَلَا خَوْفٌ
and no fear
இன்னும் பயம் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
on them
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
and not they will grieve
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Transliteration:

Innal lazeena aamanoo wallazeena haadoo wan nasaaraa was Saabi'eena man aamana billaahi wal yawmil aakhiri wa 'amila saalihan falahum ajruhum 'inda Rabbihim wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon (QS. al-Baq̈arah:62)

English Sahih International:

Indeed, those who believed and those who were Jews or Christians or Sabeans [before Prophet Muhammad (^)] – those [among them] who believed in Allah and the Last Day and did righteousness – will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve. (QS. Al-Baqarah, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௬௨)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்துவர்கள், ஸாபியிகள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.