குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௪
Qur'an Surah Al-Baqarah Verse 54
ஸூரத்துல் பகரா [௨]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْٓا اِلٰى بَارِىِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْۗ فَتَابَ عَلَيْكُمْ ۗ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ (البقرة : ٢)
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- And when said
- இன்னும் சமயம்/கூறினார்
- mūsā
- مُوسَىٰ
- Musa
- மூசா
- liqawmihi
- لِقَوْمِهِۦ
- to his people
- சமுதாயத்திற்கு/தன்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- innakum
- إِنَّكُمْ
- Indeed you
- நிச்சயமாக நீங்கள்
- ẓalamtum
- ظَلَمْتُمْ
- [you] have wronged
- அநியாயம்செய்தீர்கள்
- anfusakum
- أَنفُسَكُم
- yourselves
- ஆன்மாக்களுக்கு/உங்கள்
- bi-ittikhādhikumu
- بِٱتِّخَاذِكُمُ
- by your taking
- நீங்கள் எடுத்துக் கொண்டதினால்
- l-ʿij'la
- ٱلْعِجْلَ
- the calf
- காளைக் கன்றை
- fatūbū
- فَتُوبُوٓا۟
- So turn in repentance
- எனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- bāri-ikum
- بَارِئِكُمْ
- your Creator
- படைத்தவன்/உங்களை
- fa-uq'tulū
- فَٱقْتُلُوٓا۟
- and kill
- ஆகவேகொல்லுங்கள்
- anfusakum
- أَنفُسَكُمْ
- yourselves
- உயிர்களை/உங்கள்
- dhālikum
- ذَٰلِكُمْ
- That
- அது
- khayrun
- خَيْرٌ
- (is) better
- சிறந்தது
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- ʿinda
- عِندَ
- with
- இடம்
- bāri-ikum
- بَارِئِكُمْ
- your Creator"
- படைத்தவன்/உங்களை
- fatāba
- فَتَابَ
- Then He turned
- எனவே மன்னித்தான்
- ʿalaykum
- عَلَيْكُمْۚ
- towards you
- உங்களை
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- Indeed He! He
- நிச்சயமாக அவன்தான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- (is) the Oft-returning
- தவ்பாவை அங்கீகரிப்பவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- பேரன்பாளன்
Transliteration:
Wa iz qaala Moosaa liqawmihee yaa qawmi innakum zalamtum anfusakum bittikhaa zikumul 'ijla fatoobooo ilaa Baari'ikum faqtulooo anfusakum zaalikum khairul lakum 'inda Baari'ikum fataaba 'alaikum; innahoo Huwat Tawwaabur Raheem(QS. al-Baq̈arah:54)
English Sahih International:
And [recall] when Moses said to his people, "O my people, indeed you have wronged yourselves by your taking of the calf [for worship]. So repent to your Creator and kill yourselves [i.e., the guilty among you]. That is best for [all of] you in the sight of your Creator." Then He accepted your repentance; indeed, He is the Accepting of Repentance, the Merciful. (QS. Al-Baqarah, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
பின்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்" என்று கூறினார். ஆகவே (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௪)
Jan Trust Foundation
மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூசா தன் சமுதாயத்திற்கு, "என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த்தெய்வமாக) எடுத்துக் கொண்டதினால், நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு அநியாயம் செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள்; உங்கள் உயிர்களைக் கொல்லுங்கள். அது உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எனவே, (நீங்கள் உங்களைக் கொன்றவுடன்) (அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை அங்கீகரிப்பவன், பேரன்பாளன்.