Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௧

Qur'an Surah Al-Baqarah Verse 51

ஸூரத்துல் பகரா [௨]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ وٰعَدْنَا مُوْسٰىٓ اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ (البقرة : ٢)

wa-idh wāʿadnā
وَإِذْ وَٰعَدْنَا
And when We appointed
இன்னும் சமயம்/வாக்களித்தோம்
mūsā
مُوسَىٰٓ
(for) Musa
மூஸாவிற்கு
arbaʿīna
أَرْبَعِينَ
forty
நாற்பது
laylatan
لَيْلَةً
nights
இரவுகளை
thumma
ثُمَّ
Then
பிறகு
ittakhadhtumu
ٱتَّخَذْتُمُ
you took
எடுத்துக்கொண்டீர்கள்
l-ʿij'la
ٱلْعِجْلَ
the calf
காளைக் கன்றை
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
from after him
அவருக்குப் பின்னர்
wa-antum
وَأَنتُمْ
and you
நீங்கள்
ẓālimūna
ظَٰلِمُونَ
(were) wrongdoers
அநியாயக்காரர்கள்

Transliteration:

Wa iz waa'adnaa Moosaaa arba'eena lailatan summattakhaztumul 'ijla mim ba'dihee wa antum zaalimoon (QS. al-Baq̈arah:51)

English Sahih International:

And [recall] when We made an appointment with Moses for forty nights. Then you took [for worship] the calf after him [i.e., his departure], while you were wrongdoers. (QS. Al-Baqarah, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற்குள்ளாகவே) நீங்கள் வரம்பு மீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௧)

Jan Trust Foundation

மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் மூசாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, ஒரு காளைக்கன்றை அவருக்குப் பின்னர் (தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் அநியாயக்காரர்கள்.