Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪௦

Qur'an Surah Al-Baqarah Verse 40

ஸூரத்துல் பகரா [௨]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِيْٓ اُوْفِ بِعَهْدِكُمْۚ وَاِيَّايَ فَارْهَبُوْنِ (البقرة : ٢)

yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
O Children (of) Israel!
சந்ததிகளே/இஸ்ராயீலின்
udh'kurū
ٱذْكُرُوا۟
Remember
நினைவு கூறுங்கள்
niʿ'matiya
نِعْمَتِىَ
My Favor
என் அருளை
allatī anʿamtu
ٱلَّتِىٓ أَنْعَمْتُ
which I bestowed
எது/அருள் புரிந்தேன்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
wa-awfū
وَأَوْفُوا۟
and fulfill
இன்னும் நிறைவேற்றுங்கள்
biʿahdī
بِعَهْدِىٓ
My Covenant
வாக்கை/என்
ūfi
أُوفِ
I will fulfill
நிறைவேற்றுவேன்
biʿahdikum
بِعَهْدِكُمْ
your covenant
வாக்கை/உங்கள்
wa-iyyāya
وَإِيَّٰىَ
and Me Alone
இன்னும் என்னையே
fa-ir'habūni
فَٱرْهَبُونِ
fear [Me]
பயப்படுங்கள்/என்னை

Transliteration:

Yaa Baneee Israaa'eelaz kuroo ni'matiyal lateee an'amtu 'alaikum wa awfoo bi'Ahdeee oofi bi ahdikum wa iyyaaya farhaboon (QS. al-Baq̈arah:40)

English Sahih International:

O Children of Israel, remember My favor which I have bestowed upon you and fulfill My covenant [upon you] that I will fulfill your covenant [from Me], and be afraid of [only] Me. (QS. Al-Baqarah, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள். நானும் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௪௦)

Jan Trust Foundation

இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள்; என் வாக்கை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே பயப்படுங்கள்.